Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த 4 ராசிகளில் பிறந்தவங்கதான் அவங்க காதல் தோல்விக்கு எப்பவும் காரணமாக இருப்பார்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
காதல் அனைவரின் வாழ்க்கையிலும் அவசியம் கடந்து போகும் ஒரு அற்புதமான உறவாகும். சிலர் சரியான காதல் கிடைக்கும் போது அதை இறுக பற்றிக் கொள்வார்கள். சிலர் அவர்களின் முட்டாள்தனத்தாலும், பிடிவாதத்தாலும் கைக்கு கிடைக்கும் காதலை தவற விட்டுவிடுவார்கள் அல்லது அவர்களே தூக்கியெறிவார்கள். ஜோதிடத்தின் படி ஒருவரின் ராசி அவர்களின் ஆளுமை மற்றும் பண்புகளை நிர்ணயிப்பதாக இருக்கும்.
ஒருவரின் ஆளுமை அவர்களின் காதல் உறவிலும் பிரதிபலிக்கும். சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலுக்காக போராடும் போது சில ராசிகளில் பிறந்தவர்கள் காதலை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களின் காதல் உறவு முறிவதற்கு பெரும்பாலும் அவர்களே முக்கியக் காரணமாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்கள் பிரேக்-அப்-க்கு முக்கிய காரணமாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மூளை சொல்வதை கேட்க மாட்டார்கள் மாறாக அவர்களின் மனது சொல்வதை மட்டுமே கேட்டு உணர்ச்சிகளின் அடிப்படையில் செயல்படுபவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களில் அவர்கள் எப்போதும்அவசரமாக விரைவான முடிவுகளை எடுக்க விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எப்போதும் வாழ்க்கையை வேகமான பாதையில் வாழ விரும்புகிறார்கள்.
யாருடைய நேரத்தையும் வீணாக்க விரும்ப மாட்டார்கள். அதனால்தான் காதலில் இருந்தும் விரைவாகப் பிரிந்து விடுவார்கள். உறவில் தங்கள் துணையால் அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக அவர்கள் உணரும் போதெல்லாம் அவர்கள் உறவை முறித்துக் கொள்ள விரும்புவார்கள். அவர்கள் பிரேக்-அப் செய்வதற்கு சின்ன சின்ன காரணங்களே போதுமானது.
துலாம்
அனைத்து விஷயங்களிலும் அமைதி மற்றும் சமநிலையைக் கடைபிடிக்கும் துலாம் ராசிக்காரர்கள் இந்த பட்டியலில் இருப்பது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அவர்கள் காதலை விரைவில் முறித்துக் கொள்ள பயப்பட மாட்டார்கள். ஏனெனில் துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் அழகான மற்றும் அற்புதமான மனிதர்களால் சூழப்பட்டிருப்பதை விரும்புவார்கள்.
அதனால்தான் அவர்களுக்குப் பொருந்தாத உறவிலிருந்து விலகிச் செல்வது அவர்களுக்கு அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. வாழ்க்கையில் தனியாக இருப்பதைப் பற்றி அவர்கள் உண்மையில் பயப்படுவதில்லை. இந்த பயமின்மை அவர்களுக்கு பொருந்தாத ஒருவரிடமிருந்து எந்த சிரமமும் இன்றி அவர்களை துண்டித்துக் கொள்ள வழிவகுக்கும். அதனால் அவர்கள் எப்போதும் பிரேக் அப்பை முன்மொழிபவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பிலேயே பழிவாங்கும் குணம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அவர்கள் எந்த வகையிலும் தங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதையோ அல்லது துரோகம் செய்யப்படுவதையோ விரும்ப மாட்டார்கள்தவர். அவர்கள் விரும்பும் மற்றும் நம்பும் ஒருவரால் அநீதி இழைக்கப்படும்போது அவர்களால் அதை பொறுத்துக் கொள்ளவே முடியாது.
எனவே அவர்கள் காதலில் ஏமாற்றப்பட்டதாக உணரும்போது அவர்களின் துணையை மன்னிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும். அவர்கள் இதயத்தில் சுமக்கும் வெறுப்பு, அவர்களுடனான உறவைத் தொடர முடியாமல் அவர்களை அதிலிருந்து வெளியேற வழிவகுக்கிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரத்தை அதிகமாக விரும்புபவர்கள், அவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட மாட்டார்கள். கும்ப ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் எதார்த்தமான அணுகுமுறை கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையின் பெரும்பாலான விஷயங்களுக்கு தங்கள் மூளையைப் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
மேலும், ப்ரேக்கப்பைப் பொறுத்தவரை, அதுதான் அவர்களுக்கு நல்லது என்று விஷயம் என்று அவர்கள் உணர்ந்தால், அதிலிருந்து வெளியேற அவர்கள் பயப்படுவதில்லை. அவர்களுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர் என்று தெரிந்த ஒருவரை விட்டு விலகுவதில் இருந்து அவர்களின் உணர்ச்சிகள் தடுக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












