Latest Updates
-
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்?
இந்த 4 ராசிக்காரங்க சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பயப்படும் பலவீனமான ஆன்மாக்களாக இருப்பார்களாம்...!
மனிதராக பிறந்த அனைவருக்குமே ஏதாவது ஒரு பயம் நிச்சயம் இருக்கும். உண்மையில் பயம் இல்லாத மனிதர் என்று யாருமே இருக்க முடியாது. அது எப்படிப்பட்ட பயம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். சிலர் பெரிய பெரிய விஷயங்களுக்காக மட்டுமே அஞ்சுபவர்களாக இருப்பார்கள், அதேசமயம் சிலர் சிறிய விஷயங்களுக்குக் கூட பயப்படுபவர்களாக இருப்பார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவரின் தைரியம் மற்றும் கோழைத்தனம் அவர்களின் ராசியைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி சில ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலிகளாக இருப்பார்கள், அதேபோல சில ராசிகளில் பிறந்தவர்கள் முற்றிலும் எதிர்மறையாக அனைத்து விஷயங்களுக்கும் பயப்படும் கோழைகளாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பயப்படும் கோழைகளாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புடையவர்கள். அவர்கள் சில சமயங்களில் முட்டாள்களாகவும், சில சமயங்களில் புத்திசாலிகளாகவும் செயல்படுவார்கள். மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ள முயல்வார்கள்.
அவர்கள் தங்கள் திறமைகளையும், புத்திசாலித்தனத்தையும் அனைவருக்கும் காட்ட விரும்புகிறார்கள்.அதனால் அவர்கள் தங்கள் பயத்தை எப்போதும் மறைத்தே வைத்திருப்பார்கள். தங்களுக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்கள் கேட்டு விடுவார்களோ அல்லது செய்ய சொல்வார்களோ, அதனால் தங்களின் பலவீனம் வெளியே தெரிந்து விடுமோ என்று எப்போதும் பயப்படுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புத்திக்கூர்மை வாய்ந்தவர்கள் அதேசமயம் அனைத்திற்கும் பயப்படுவார்கள். சிலந்திகள், எலிகள், கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் போன்ற சின்ன சின்ன உயிரினங்களைப் பார்த்தும் அவர்கள் மிகவும் பயப்படுவார்கள்.
இந்த உயிரினங்களை பார்க்கும் போது அவர்கள் தங்களை மறந்து பயப்படுவார்கள் மற்றும் சங்கடப்படுவார்கள். பேய்கள் தொடர்பான விஷயங்களும் அவர்களை பயமுறுத்தும். அதனால்தான் அவர்கள் எப்போதும் தனியாக இல்லமல் யாராவது ஒருவருடனேயே இருக்க விரும்புகிறார்கள். தனிமை அவர்களை மிகவும் வருத்தமாகவும், மனச்சோர்வாகவும் மாற்றும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் மர்மமானவர்களாக அறியப்படுகிறார்கள் அதேசமயம் எந்த விஷயத்தைப் பற்றியும் அதிகமாக சிந்திக்கும் பிரச்சினையும் அவர்களிடம் உள்ளது. சூழ்நிலைகள் சரியாக இருந்தாலும், அவர்கள் தங்கள் கற்பனையால் அதனை மோசமாக்குவார்கள்.
அவர்களின் பிடிவாதத்தால் செய்ய முடியாத வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள், அதனால் அவர்களால் சரியானவர்களாக இருக்க முடியாது. அவர்களிடம் உதவி என்று ஏதாவது கேட்டாலே அவர்கள் பயந்து ஒளிந்து கொள்வார்கள். அவர்கள் கோழைகள் மட்டுமல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவற்றாத ஏமாற்றுக்காரர்களும் கூட.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் நிம்மதியான வாழ்க்கை மீது எப்போதும் ஆர்வமும், ஆசையும் இருக்கும். அதனால் இவர்கள் எந்த விதமான சச்சரவுகளையும் தவிர்க்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் விவகாரங்களில் ஒருபோதும் தலையிட மாட்டார்கள், அவர்கள் வாழ்க்கையில் மற்றவர்களை தலையிடவும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஏதாவது ஒரு இடத்தில் சண்டை நடந்தால் அங்கிருந்து முதலில் தப்பி ஓடுவது அவர்களாகத்தான் இருக்கும். எந்த விதத்திலும் தங்களுக்கு மற்றவர்களால் பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












