Latest Updates
-
ஜூலை 20-ல் சூரியன் நட்சத்திரத்தை மாற்றுவதால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த 5 காலை பழக்கங்கள் இதய நோயின் அபாயத்தை அதிகரிக்குமாம்.. உஷார்.. -
400 ஆண்டுக்கு முன் தோன்றி இப்போதும் செயல்பாட்டில் உள்ள உலகின் முதல் வங்கி எது? அதன் முதலாளி யார் தெரியுமா? -
ராகுவின் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 02 முதல் இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
மசாலா மினி இட்லி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஜூலை 27-ல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்குவதால் 138 நாட்கள் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
மணமணக்கும் மல்லி வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 5 ரேகைகளில் ஒன்று கையில் இருப்பவர்களுக்கு நிச்சயம் காதல் திருமணம்தான் நடக்குமாம் - உங்க கையில் இருக்கா? -
சூரியன்-ராகு உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் சகல துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உழைப்பும், முயற்சியும் மட்டும் போதாது, ஒழுக்கமும் வேண்டும். ஏனெனில் ஒழுக்கம் இல்லாதவர்கள் எவ்வளவு பெரிய வெற்றியை அடைந்தாலும் அவர்கள் சமூகத்தில் மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்காது. சுய ஒழுக்கம் என்பது அனைவராலும் மதிக்கப்படும் ஒரு நல்ல பண்பாகும். துரதிர்ஷ்டவசமாக இது இது பலரிடமும் இல்லாத குணமாக மாறி வருகிறது, ஆனால் சிலருக்கு இந்த குணம் இயற்கையாகவே இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடுமையான ஒழுக்கத்தைக் கடைபிடிப்பார்கள், அவர்களின் சுய கட்டுப்பாடு அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும். சுய ஒழுக்கமான ராசிக்காரர்கள் தாங்கள் செய்யக்கூடாத ஒன்றைச் செய்வதையோ அல்லது அவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விஷயங்களையோ எதிர்க்கும் திறனைக் கொண்டுள்ளனர்.

இந்த சுய ஒழுக்கம் கொண்ட ராசிகள் தங்கள் வாழ்க்கையின் உண்மையான குறிக்கோள்களில் கவனம் செலுத்தி, நேர்மையான செயல்பாடுகள் மூலம் தங்கள் வாழ்க்கையில் வெற்றியையம், மரியாதையையும் பெறுவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களைப் போல அர்ப்பணிப்புடனும், உறுதியுடனும் யாராலும் இருக்க முடியாது. இவர்கள் மிகவும் சுய ஒழுக்கமுள்ளவர்கள், அவர்கள் இலக்குகளை நிர்ணயிப்பவர்களாகவும், அதை அடைவதற்கு சரியாக திட்டமிடுபவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய வேண்டுமென்பதை விட அதை ஒழுக்கமாக அடைய வேண்டுமென்பதில் கவனமாக இருப்பார்கள்.
அவர்களின் ஒழுக்கமும், அறிவும் அவர்கள் தங்கள் திட்டங்களைப் பின்பற்றவும், நிலையான வேகத்தில் முன்னேறவும் உதவுகிறது, அவர்கள் வழிதவறிச் செல்ல ஆசைப்பட்டாலும் கூட அதை பின்பற்ற மாட்டார்கள். வெற்றி ஏன் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது என்பதை மகர ராசிக்காரர்கள் அறிந்திருக்கிறார்கள். இந்தப் புரிதல் அவர்களை வாழ்க்கையில் வழிதவறாமல், சீராக முன்னேற உதவுகிறது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கத்தை கடைபிடிக்க விரும்புகிறார்கள். அது உணவு முறையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, அதில் ஒரு கட்டுப்பாட்டை கடைபிடிப்பார்கள். இந்த குணம்தான் அவர்களை மிகவும் சுய ஒழுக்கமுள்ள ஒருவராக மாற்றுகிறது. மேலும், இது அவர்களின் வேலையைசிறப்பாக செய்யவும், அவர்களின் இலக்குகளை அடையவும் அவர்களின் சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.
அவர்கள் விதிவிலக்கான புத்திசாலிகள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்கள். கடுமையான சுயக்கட்டுப்பாடு இல்லையென்றால், தங்கள் சொந்த எண்ணங்களில் மூழ்கி, எதையும் சாதிக்க முடியாமல் போய்விடுவோம் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் தங்கள் வெற்றியை உறுதி செய்ய அனைத்து விஷயங்களிலும் ஒழுக்கத்தை கடைபிடிக்கிறார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எது சோதனைக்கு உட்படுத்தும் என்பதை நன்கு அறிவார்கள். அவர்கள் தங்கள் பாதையிலிருந்து தங்களைத் தடம் புரளச் செய்யும் முயற்சிகளைப் பற்றி பகுத்தறிவுடன் சிந்திப்பார்கள். மேலும், ஒரு சிறிய தவறு தங்கள் கடந்த கால உழைப்பு மற்றும் முயற்சி அனைத்தையும் வீணாக்குவது எவ்வளவு மோசமானது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருந்தாலும் சரி, அது அவர்களின் ஒழுக்கத்தை பாதித்தால் அதனை செய்ய மாட்டார்கள்.
அவர்கள் தங்கள் இலக்கிலிருந்து தங்களை விலக்கும் விஷயங்களைப் பற்றி தங்களுக்குளேயே தீர ஆலோசிப்பார்கள், அவற்றை முடிந்தவரை தங்கள் வாழ்க்கையிலிருந்து அப்புறப்படுத்துவார்கள். இதனால் கன்னி ராசிக்காரர்கள் சுய ஒழுக்கம் கொண்ட ராசிக்காரர்களில் ஒருவராக மாறுகிறார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தாங்களும் மனிதர்கள்தான் அதனால் அவர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். இந்த எதார்த்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அவர்களைத் தொடர்ந்து ஒழுக்கமான பாதையில் செல்ல உதவுகிறது. அவர்கள் மிகவும் சுய ஒழுக்கமுள்ள ராசிக்காரர்களில் ஒருவராக இருப்பதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. கடக ராசிக்காரர்கள் மிகப்பெரிய விஷயங்களை செய்ய மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட மொத்த பழியும் அவர்கள் மேல்தான் விழும்.
அவர்கள் மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள். அவர்கள் 100% சரியானவர்கள் அல்ல என்பதையும் தவறுகளைச் செய்வார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், இதை ஒப்புக்கொள்வது அவர்களை ஒழுக்கத்தின் பாதியில் உறுதியுடன் செல்ல அனுமதிக்கிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications