Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
100 ஆண்டுகளுக்கு பின் ஒரே மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ஜூன் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன.
அந்த வகையில் ஜூன் 06 ஆம் தேதி கிரகங்களின் இளவரசனான புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார். இதனால் மிதுன ராசியில் பத்ரா ராஜயோகம் உருவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து ஜூன் 15 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மிதுன ராசியில் ஏற்கனவே இருக்கும் புதனுடன் சூரியன் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

அதன் பின் ஜூன் 29 ஆம் தேதி அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் விளைவாக ரிஷப ராசியில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி ஜூன் மாதத்தில் மூன்று சக்தி வாய்ந்த ராஜயோகங்கள் உருவாவதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.
இதனால் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் போகின்றன. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது ஜூன் மாதத்தில் உருவாகும் 3 ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு பத்ரா, புதாதித்ய மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் பேச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பத்ரா, புதாதித்ய மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். அசையா சொத்துக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் நல்ல பலனைப் பெறுவீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இக்காலத்தில் நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பத்ரா, புதாதித்ய மற்றும் மாளவ்ய ராஜயோகங்களால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் அவருடனான உறவு வலுபெறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
