Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு புது சொத்துக்கள் குவியப்போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் சூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரியனின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போது சூரியன் தனது நட்சத்திரத்தை மாற்றப்போகிறார். இந்த நட்சத்திர மாற்றம் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சூரியன் கும்ப ராசியில் நகரும்போது, பிப்ரவரி 22 ஆம் தேதி சதய நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி நிழல் கிரகமான ராகு.
சூரியனின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அபரிமிதமான அதிர்ஷ்டத்தைக் கொடுக்கப்போகிறது. இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்படப்போகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் பலனடையப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சூரியன் சதய நட்சத்திரத்திற்கு செல்வது மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றம் அவர்களின் சமூக அந்தஸ்தையும், அங்கீகாரத்தையும் அதிகரிக்கும். புதிய திட்டங்களும், பொறுப்புகளும் நற்பெயரை மேம்படுத்தும். அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும்.
அவர்களின் வாழ்க்கைத் துணைக்காக சில ஆச்சரியப் பரிசுகளை வழங்கலாம். இந்த காலகட்டம் அவர்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் பெரிய லாபத்தை அடைவார்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் ராசி அதிபதியாக சூரியன் இருப்பதால் இந்த நட்சத்திர மாற்றம் அவர்களுக்கு அற்புதமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றம் அவர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது, மேலும் அவர்கள் பல்வேறு ஆதாரங்களில் இருந்து வருமானத்தை எதிர்பார்க்கலாம். அவர்கள் வேலையில் செயல்திறனால் பெரிய விஷயங்களை சாதிக்கலாம், மேலும் உங்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரம் தேடிவரும்.
மூதாதையர் சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் சிறந்த பலன்களை எதிர்பார்க்கலாம். சூரியன் அருளால், வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் அவர்களுக்கு அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் துணையாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தங்கள் எதிரிகள் கூட பொறாமைப்படும் அளவிற்கு வளர வாய்ப்பு கிடைக்கும். கடந்த காலத்தில் கிண்டல் செய்யப்பட்ட பலர் முன்வந்து உங்களிடம் உதவி கேட்பார்கள். அவர்களின் நீண்ட கால ஆசைகள் இப்போது நிறைவேற வாய்ப்புள்ளது.
பொதுவாகவே மகர ராசிக்காரர்கள் அவர்கள் நேசிப்பவர்களுக்கு அன்பைத் திருப்பிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் அன்பும், அமைதியும் அதிகரிக்கும். இதுவரை நடந்து வந்த சட்டப் போராட்டங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். வெளிநாட்டில் செட்டிலாக விரும்புபவர்களுக்கு இப்போது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
