Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
1 வருடம் கழித்து மகம் நட்சத்திரம் செல்லும் சூரியன்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் சூரியனை போல பிரகாசிக்கப்போகுது
Sun Transit In Magha Nakshatra On 17 August 2025: ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அதோடு குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்.
தற்போது சூரியன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி சூரியன் சிம்ம ராசிக்குள் நுழைவதோடு, அதே நாளில் மகம் நட்சத்திரத்திற்குள்ளும் நுழையவுள்ளார். இந்த மக நட்சத்திரத்தின் அதிபதி கேது. இந்த கேது ஞானம், பற்றற்ற தன்மை, ஆன்மீக நாட்டம் மற்றும் திடீர் மாற்றங்களைக் குறிக்கும். சில சமயங்களில் கேது விரக்தி, அமைதியின்மை மற்றும் மன குழப்பத்தையும் குறிக்கும்.

கேதுவின் நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதிர்ஷ்டம் பிரகாசித்து ஒவ்வொரு வேலையிலும் வெற்றியும், பணமும் குவியும் வாய்ப்புள்ளது. இப்போது சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்கியத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் புதிய திறமையை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணக்கூடும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியுடன், நிதி நன்மைகளையும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சிலருக்கு வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். முக்கியமாக இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதுமண தம்பதிகள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதை கிடைப்பதோடு, புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். மொத்தத்தில் இந்த சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications