Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
1 வருடத்திற்கு பின் துலாம் செல்லும் சூரியன்: அக்டோபர் 17 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்...
Sun Transit In Libra On 17 October 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் 1 மாதம் வரை இருப்பார். சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் வருகிற அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் தமிழ் மாதமான ஐப்பசி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

முக்கியமாக 3 ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் பணியிடத்தில் பதவி உயர்வும், தொழிலை விரிவாக்கம் செய்யவும், வணிகத்தில் நல்ல லாபமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதோடு சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இப்போது துலாம் ராசிக்கு செல்லும் சூரியனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கும் வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சியால் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் நற்பெயரும், கௌரவமும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட கால குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தாயுடனான உறவு மேம்படும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முன்னேற்ற பாதைகள் திறக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
