Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கபோகுது
Sun Transit In Leo On 17 August 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒரு ராசியில் 30 நாட்கள், அதாவது 1 மாதம் வரை இருப்பார். இந்த சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார். தற்போது சூரியன் சந்திரனின் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சூரியன் ஆகஸ்ட் மாதத்தில் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த சூரிய பெயர்ச்சியானது ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த சிம்ம ராசியில் சூரியன் அடுத்த ஒரு மாத காலம் பயணிப்பார் மற்றும் சூரியன் இந்த சிம்ம ராசிக்கு சுமார் 1 வருடம் கழித்து நுழைகிறார். இப்படி சூரியன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைப்பதோடு, நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். அதோடு சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது சூரியன் சிம்ம ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சிக்க நினைத்தால், குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் வங்கி இருப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்ட பிரகாசிக்கப் போகிறது. வேலை மற்றும் வணிகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பொருள் வசதிகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். பேச்சாற்றல் மேம்படும். பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நிதி நிலை மேம்படும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications