Latest Updates
-
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க...
சூரியன்-குரு உருவாக்கும் ஷடாஷ்டக யோகம்: ஜனவரி 03-ல் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது...
Shadashtak Yog On 03 January 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் தேவர்களின் குருவான குரு பகவான் மற்றும் கிரகங்களின் தலைவனான சூரிய பகவானும் மிகவும் முக்கியமான கிரகங்களாகும்.
இவ்விரு கிரகங்களின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் சூரியன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் ஜனவரி 03 ம் தேதி சூரியன் மற்றும் குருவின் நிலைகளால் ஷடாஷ்டக யோகம் உருவாகவுள்ளது.

இந்த ஷடாஷ்டக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
2025 புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். வணிகர்கள் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
2025 புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் சேமிக்கவும் முடியும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறக்கூடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் பல புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications