Latest Updates
-
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்..
குரு-சூரியன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
Sun Jupiter Make Ardhakendra Yog On April 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவனாக சூரியனும், தேவர்களின் குருவாக குரு பகவானும் கருதப்படுகின்றனர். இவ்விரு கிரகங்களுமே மிகவும் மங்களகரமான மற்றும் முக்கியமான கிரகங்களாகவும் கருதப்படுகின்றன.
இந்த இரண்டு கிரகங்களில் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இதில் சூரியன் தற்போது மேஷ ராசியில் பயணித்து வருகிறார். குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இவ்விரு கிரகங்களும் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி அர்த்தகேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளனர்.

இந்த யோகமானது சூரியனும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் இருப்பதனால் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இதில் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களையும், சிலர் மோசமான பலன்களையும் பெறலாம். இப்போது சூரியன் குருவால் உருவாகும் அர்த்தகேந்திர ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர ராஜயோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறுகூர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குரு பகவானின் ஆசியால் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தின் கதவு திறந்து, வெற்றிகளும், பணமும் குவியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர ராஜயோகமானது வாழ்க்கையில் பலவிதமான நல்ல செய்திகளை பெற வைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் வாய்ப்புள்ளது. மேலும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தகேந்திர ராஜயோகமானது ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியை அளிக்கும். பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. சிலருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. எதிரிகளுக்கு கடுமையான போராட்டை வழங்கி வெற்றி பெறுவீர்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
