Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
57 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அரிய கிரக சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்கள் ராஜவாழ்க்கை வாழப்போறாங்களாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரக மாற்றமும் மிகவும் முக்கியமானது. 57 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய கிரக மாற்றம் நடக்கப் போகிறது. மார்ச் மாதம் ஆறு கிரகங்கள் ஒன்றாக இணையப்போகிறது. இந்த 6 கிரகங்களின் இணைப்பு வேத ஜோதிடத்தில் ஒரு அரிய கிரக இணைப்பாக கருதப்படுகிறது. மீன ராசியில் ஆறு கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன.
மார்ச் 29 ஆம் தேதிக்குள் ராகு, சுக்கிரன், சனி, புதன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய ஆறு கிரகங்களும் மீன ராசியில் தங்கள் நிலைகளை நிலைநிறுத்தப் போகிறார்கள். மீன ராசியில் ஆறு கிரகங்கள் இணையவிருப்பதால் சில ராசிக்காரர்கள் அளவிலா அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
இந்த அரிய கிரக சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. அவர்களின் அனைத்து முயற்சிகளும் அவர்களுக்கு வெற்றியைத் தரும். அவர்களின் பலமும், தன்னம்பிக்கையும் அதிகரிப்பதால் எதிரிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் நீண்ட கால கடன் பிரச்சினைகளிலிருந்து இப்போது வெளிவரலாம். அவர்கள் சார்ந்த துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அலுவலகத்தில் அவர்களின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைப்பது சாத்தியமாகும். அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உடன்பிறந்தவர்களுடன் இணைந்து பொருளாதார வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். உங்களின் பணக்கஷ்டம் இந்த கிரக பெயர்ச்சியால் முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். இதனால் அவர்களின் மனநல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
கன்னி
இந்த ஆறு கிரகங்களின் இணைப்பு கன்னி ராசியின் ஏழாவது வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, கன்னி ராசிக்காரர்கள் நிதி ஆதாயங்கள் முதல் நேர்மறையான மாற்றங்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இந்த அரிய சேர்க்கையால் தொழிலில் நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், இதனால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களும் பல நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அவர்கள் நீண்ட காலமாக தேடிக்கொண்டிருந்த மனஅமைதி கிடைக்கும். அவர்களின் நீண்ட கால லட்சியங்கள் இப்போது நிறைவேறும். மற்றவர்களின் மீதிருந்த மனக்கசப்புகள் முடிவுக்கு வருவதால் அவர்கள் குடும்பத்தில் அமைதி திரும்பும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஆறு கிரகங்களின் சேர்க்கையால் பல நன்மைகள் கிடைக்கப்போகிறது. அவர்களின் நிதி சிக்கல்கள் இப்போது முடிவுக்கு வரும். அவர்கள் தங்கள் கடன் சுமையைக் குறைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் நீண்ட காலமாக கிடப்பில் போட்டிருந்த பல விஷயங்களை இப்போது சாதிக்க முடியும்.
மனதை கவலைப்படுத்தும் விஷயங்கள் இப்போது முடிவுக்கு வரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும். வியாபாரிகள் தங்கள் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் முதல் புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையுடன் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
