Latest Updates
-
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 18 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
சனியின் 3 ஆம் பார்வையால் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அதிகரிக்கப்போகுது.. உஷார்...
Shani Third Sight: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் நிலைகள் மட்டுமின்றி, அவற்றின் பார்வைகளும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவரான சனி பகவான் இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்தில் தாக்கம் அதிகம் இருக்கும். அதற்காக சனி பார்க்கும் அனைத்து பார்வைகளும் மோசமான பலனைத் தரும் என்பதில்லை.
சனியின் பார்வைகளில் 3, 7, 10 ஆகிய பார்வை மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதில் 7 மற்றும் 10 ஆம் பார்வையால் 75 சதவீதம் நற்பலன்களைப் பெறக்கூடும். ஆனால் 3 ஆம் பார்வையானது பலவித சோதனைகளை, சிரமங்களைத் தருவதாக கூறப்படுகிறது. தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் ஜூன் 01 ஆம் தேதி செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசிக்குள் நுழைந்தார். இதனால் சனியின் மூன்றாம் பார்வை மேஷ ராசியில் உள்ள செவ்வாயின் மீது பதிவதால், சில ராசிக்காரர்கள் பல கஷ்டங்களை சந்திக்கப் போகிறார்கள்.

அதுவும் அந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிப்பதோடு, பண இழப்பு, ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும். இப்போது செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வையால் கஷ்டப்படப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
சனியின் மூன்றாம் பார்வையானது கடக ராசிக்காரர்களுக்கு பல கஷ்டங்களைத் தரும். முக்கியமாக நிதி இழப்பை ஏற்படுத்தும். வருமானத்தில் குறைவு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு விஷயத்தை நினைத்து மன அழுத்தத்தில் இருப்பீர்கள். தொழிலில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
கன்னி
சனியின் மூன்றாம் பார்வை கன்னி ராசிக்காரர்களின் வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாகக அதிக மன அழுத்தத்தால் அவதிப்பட நேரிடும். விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் எதிரிகள் உங்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்தலாம். பணப் பிரச்சனையால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் வேலை பறிபோக நேரிடும்.
துலாம்
சனியின் மூன்றாம் பார்வை துலாம் ராசிக்காரர்களுக்கு தீங்கை விளைவிக்கும். குடும்பத்தில் பண பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடலாம். திருமணமாகாமல் இருந்தால், இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். இதன் விளைவாக மன அழுத்தம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு இல்லாததால் வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பது கடினமாக இருக்கும். எக்காரணம் கொண்டும் பணத்தை எதிலும் முதலீடு செய்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், பண இழப்பை சந்திப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications