Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
ஷ்ராவண மாதத்தில் சிவனுக்கு மிகவும் பிடித்தமான ராசிகள்... இந்த ராசியினருக்கு சிவபெருமானின் அருள் பொழியும்..!
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சிவபெருமானுக்கு சில ராசியினரை மிகவும் பிடிக்கும். அதிலும் இப்போது ஷ்ராவண மாதம் நடந்துக்கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில் இந்த ராசியினர் மீது சிவன் தனது அருளை வழக்கத்தை விட அதிகமாகவே பொழிவார் என்பது ஐதீகம்.. இந்த ராசியினர் எப்போதும் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை..
ஷ்ராவண மாதம் 2024 மிகவும் முக்கியமானது. மகாதேவருக்கு பிடித்தமான ஷ்ராவண மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கியது.. தேவர்களின் இறைவனான மகாதேவனை மகிழ்விப்பதன் மூலம் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி வளம் பெறுவோம் என சாஸ்திரங்கள் சொல்லுகின்றன..

சாதுர்மாசத்தின் தொடக்கத்திற்குப் பிறகு, ஷ்ராவண மாதத்திலிருந்து படைப்பின் பொறுப்பு சிவபெருமானின் தோள்களில் விழுகிறது. ஏனெனில் தேவசயனி ஏகாதசியில் இருந்து விஷ்ணு 4 மாதங்கள் யோக உறக்கத்தை மேற்கொள்கிறார்.. அதனால் சிவன் முழுபொறுப்பபையும் மேற்கொள்கிறார்.. அதே சமயம் ஜோதிட சாஸ்திரப்படி சில ராசிக்காரர்களுக்கு சிவபெருமானை மிகவும் பிடிக்கும். இந்த 4 ராசிகளும் எப்போதும் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுகின்றனர். இந்த 4 ராசிக்காரர்களும் சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டால் வேண்டுதல்கள் நிறைவேறும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமானின் நித்திய அருள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
துலாம்
இந்த ராசிக்காரர்களுக்கு சிவனின் அருள் முழுவதுமாக கிடைக்கும். சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான ராசியாக இருப்பதால், துலாம் ராசிக்காரர்களுக்கு சிவபெருமானை மகிழ்விப்பதில் சிரமம் இருக்காது. துலாம் ராசியை சுக்கிரன் ஆட்சி செய்கிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். சிவபெருமான் அவர்களுக்கு அருள் பாலிக்கிறார். வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்கும் போதெல்லாம் சிவன் பாடல்களை முழு மனதுடன் சொல்லி கடவுளை வணங்குங்கள். துலாம் மென்மை, மகிழ்ச்சி மற்றும் அமைதியை அடைய உதவுகிறது. சிவனின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.
கும்பம்
சிவனுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் கும்பமும் ஒன்று. இந்த ராசி சனிக்கு உரியது. இந்த ராசிக்காரர்கள் சங்கரரைப் பிரியப்படுத்த அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை. கும்ப ராசிக்காரர்கள் இதயத்தில் உண்மையானவர்கள் மற்றும் எப்போதும் மற்றவர்களின் நன்மையைத் தேடுவார்கள். இதனாலேயே சிவபெருமான் இந்த ராசியிடம் எப்போதும் கருணை காட்டுகிறார். சிவபெருமானை வழிபடுவதன் மூலம் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் நிறைந்திருக்கும்.
மகரம்
இந்த ராசிக்கு அதிபதி சனி, சிவபெருமானின் அருளால் நீதிபதி பதவியை பெற்றுள்ளார். இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் சிவனின் அருள் உண்டு. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை முழு மனதுடன் வழிபட்டால், வாழ்க்கையில் தோல்வியை சந்திக்க மாட்டார்கள். கஷ்ட காலங்களில் சிவபெருமானின் பஞ்சாக்ஷரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மீனம்
மீனம் ராசியினர் ஆன்மீகம் மற்றும் இரக்க குணம் கொண்டவர்கள். இது சிவனின் விருப்பமான ராசியாகும் . மீன ராசிக்காரர்கள் சிவபெருமானால் ஆசிர்வதிக்கப்படும் தெய்வீக உணர்வு குணங்களைக் கொண்டுள்ளனர். சிவனின் அருளால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏமாற்றம் அடைவதில்லை. இந்த மக்கள் எப்போதும் சிவபெருமான் ஆசீர்வாதத்துடன் முன்னேறுகிறார்.. இதனால் அவர்கள் எப்போதும் சமூகத்தில் மிகவும் பிரபலமானவர்களாக இருப்பார்கள்..
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications