Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
சனி அமாவாசை அன்று நிகழும் சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு சனியின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கப்போகுது..
Saturn Transit On Shani Amavasya 2025: வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்நாளில் தான் அமாவாசை வருகிறது.
அதுவும் இந்த அமாவாசையானது சனிக்கிழமைகளில் வருவதால், இது சனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த சனி அமாவாசைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த நாளில் மக்கள் புனித நதியில் நீராடி, சிவபெருமானை வழிபடுவார்கள். மேலும் இந்நாளில் முன்னோர்களுக்கு திதியும் வழங்குவார்கள்.

ஜோதிடத்தின் படி, சனி அமாவாசை நாளில் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதுவும் இந்த ராசி மாற்றத்தின் போது சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் மீன ராசிக்கு செல்கிறார். இதனால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் சனியின் பிடியில் இருந்து விடுபட்டு, செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள்.
இன்னும் சிலர் சனியின் பிடியில் சிக்கி வாழ்க்கையில் பல பிரச்சனைகளையும் துன்பங்களையும் சந்திப்பார்கள். இப்போது சனி அமாவாசை நாளில் நிகழும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் சனியில் பிடியில் இருந்து விடுபடப்போகிறார்கள் என்பதைக் காண்போம்.
கடகம்
2025 ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் இருந்து விடுபடுவார்கள். இதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் பெறுவார்கள். தொழில் ரீதியாக சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுள்ளார். இதனால் கடக ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
விருச்சிகம்
2025 ஆம் ஆண்டின் சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்து விடுபடவுள்ளார்கள். இதுவரை சனியில் பிடியில் சிக்கி அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்கள், சனிப் பெயர்ச்சிக்கு பின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணவுள்ளனர். மன அழுத்தத்தினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து நிவாரணம் பெறுவார்கள்.
ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், சனிப்பெயர்ச்சிக்கு பின் தொடங்கினால், நல்ல பலனைப் பெறலாம். வேலை தேடிக் கொண்டிருந்தால், இனி நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
2025 ஆம் ஆண்டின் சனிப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடவுள்ளார்கள். வருகிற சனி அமாவாசை நாளில் இருந்து வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணப் பிரச்சனைகள் நீங்கும்.
முதலீடுகளை செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தை விரிவாக்கும் செய்ய முடியும். நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
சனி அமாவாசை என்பது சனிக்கிழமையில் வரும் அமாவாசை ஆகும். சனி அமாவாசை என்பது கர்மாவை வழங்குபவரான சனி பகவானின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கான ஒரு சிறப்பான நாள். இந்த சனி அமாவாசையில் சனி பகவானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என கூறப்படுகிறது.
வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் 29 ஆம் தேதி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இருப்பார்.
2025 ஆம் ஆண்டின் சனிபெயர்ச்சிக்கு பின் கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியில் இருந்தும், விருச்சிக ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியில் இருந்தும், மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்தும் விடுபடுவார்கள்.



Click it and Unblock the Notifications