Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
2025 சனிப்பெயர்ச்சியால் தொடங்கும் பாக்கிய சனி.. கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 1/2 வருஷம் எப்படி இருக்கும்?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசிமாற்றம் மார்ச் மாத இறுதியில் நிகழவுள்ளது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி கடக ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
சனி பகவான் வரும் 29 ஆம் தேதி முதல் தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் வீடான மீன ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். இதனால் 2025 சனிப்பெயர்ச்சியால் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

கடக ராசிக்காரர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டு காலம் பாடாய்படுத்தி வந்த அஷ்டமத்து சனி காலம் முடிந்து, பாக்ய சனி தொடங்குவதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித் தரப்போகிறார்.
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தின் மீது சனியின் பார்வை விழுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். நிறைய பண வரவும், அசையா சொத்துக்கள் மூலம் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். தூரதேச பிரயாணம் ஏற்படும்.
உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டினை சனி பார்வையிடுவதால் சகோதரர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை.
வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்ம காரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.
பாக்ய சனி நிறைய பாக்கியங்களை அள்ளித்தரப்போகிறது. விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இனி ஏழரை ஆண்டுகளுக்கு பொற்காலம் தான். அதெப்படி ஏழரை ஆண்டுகள் என்று கேட்கிறீர்களா? ஒன்பதாம் வீட்டில் அமரும் சனி அடுத்து மேஷம் ராசிக்கு நகரும் போது பத்தாம் வீடு, ரிஷபம் ராசிக்கு சனி நகரும் போது லாப ஸ்தானமான 11ஆம் வீடு இப்படி ஏழரை ஆண்டு காலம் சனி பகவான் உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்வார்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் பிரச்சினையை சந்தித்து வந்தவர்களுக்கு இனி எல்லாம் ஜெயமாகப் போகிறது. உழைப்பு உயர்வை தரப்போகிறது. வேலையில் இடமாற்றம் கிடைக்கும்.. உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நல்ல புரமோசன் கிடைக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும்.
சனிபகவான் நற்பலன்களை வாரி வழங்கப்போகிறார். உங்களின் விடா முயற்சி விஸ்வரூப வெற்றியாக இருக்கப் போகிறது. உங்களின் முயற்சிக்கேற்ப பலன் கிடைக்கும். விரும்பிய யாவும் கைக்கு வந்து சேரும். 2030ஆம் ஆண்டு வரைக்கும் சனிபகவான் உங்களுக்கு நற்பலன்களை அள்ளி தரப்போகிறார். உங்களின் உழைப்புக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வருவதால் வருமானமும் அதிகரிக்கும்.
உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும். நேர்மையாக இருப்பீர்கள். ஆலய தரிசனம் அற்புதமான பலன்களை தரும். அஷ்டம சனியால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். குல தெய்வ அருளினால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடி வரும். சிலருக்கு புரமோசனுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மன உளைச்சல் நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.
சனிபகவான் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டை பார்க்கிறார். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடக்கும். வெற்றிகள் தேடி வரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த கால கட்டத்தில் புதிய சொத்துக்களை வாங்கலாம். சொந்த வீடு கட்டலாம். பண வருமானம் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிதாக கட்டிய வீட்டில் குடியேறுவீர்கள். வெளிநாடு பயணம் யோகத்தை தரப்போகிறது. ஆசைகள் கனவுகள் நிறைவேறும். குழந்தைகள் வழியாக சந்தோஷங்கள் அதிகரிக்கும். அவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடி வரும்.
சனிபகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டினை பத்தாம் பார்வையாக பார்வையிடுகிறார். நோய்கள் தீரும், வெற்றிகள் தேடி வரும். எதிரிகளின் தொல்லை ஒழியும். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். கணவன் மனைவி இடையே அன்பு பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். போட்டி தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது.
மாணவர்களுக்கு கல்வி நிலை அற்புதமாக இருக்கும். இதுநாள் வரை கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சங்கடங்கள் விலகும் காலம் வந்து விட்டது. சாதனைகள் செய்யப்போகிறீர்கள். கடன்கள் அடைபடும் நேரம் கைகூடி வரப்போகிறது. திருநாள்ளாறு சனிபகவானை போய் தரிசனம் செய்து தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications