Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
2025-ல் நடக்கும் சனிப் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு ஏழரை சனி தொடங்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒழுக்கம் மற்றும் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். கிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர். இதனால் சனியின் நிலைகளில் ஏற்படும் சிறு மாற்றங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அதுவும் சனி ராசியை மாற்றும் போது, சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கும். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டு சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அதாவது 2025-ல் சனி பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

மீன ராசிக்கு சனி பகவான் செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படுவதோடு, சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இப்போது 2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கப் போகிறது என்பதைக் காண்போம்.
கும்பம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இறுதி கட்டம் தொடங்குகிறது. இதுவரை வாழ்க்கையில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்தித்து வந்தவர்கள், 2025 ஆம் ஆண்டில் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வீர்கள். முக்கியமாக கடின உழைப்புக்கான பலன்களை பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். ஆனால் ஆரோக்கியம் மற்றும் உறவுகளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மீனம்
2025 ஆம் ஆண்டில் நடக்கும் சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது. அதாவது இந்த கட்டத்தில் சனி பகவான் இந்த ராசிக்காரர்களின் தொழில், நிதி மற்றும் உறவுகளில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார். சொல்லப்போனால் இந்த ராசிக்காரர்களின் பொறுமை சோதிக்கப்படும். நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மிகவும் கடினமான காலமாக இருக்கும். இக்காலத்தில் ஆன்மீகத்தில் நேரத்தை அதிகம் செலவிட்டால், தாக்கத்தைக் குறைக்கலாம்.
மேஷம்
2025-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. ஏழரை சனியின் முதல் கட்டம் என்பதால், நிதி மற்றும் தொழில் ரீதியாக திடீரென்று நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். திடீரென்று பொறுப்புக்கள் அதிகரிக்கும். ஏழரை சனியின் தொடக்கம் என்பதால், சனியின் தாக்கம் அவ்வளவு தீவிரமாக இருக்காது. ஆனால் எதிர்காலத்தில் சந்திக்கவுள்ள பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில் நீங்கள் உங்களை இக்காலத்தில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
