Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
சனிபகவானும், சூரியனும் கும்ப ராசியில் இணைவதால் 2025-யை ஆளப்போகிற 3 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி என்ன?
கிரகங்களின் ராஜாவான சூரியனும், சனிபகவானும் 2025 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார்கள். இந்த இரண்டும் இணைவது ஒரு ஒரு அபூர்வமான கிரக சேர்க்கையாகும். பெரும்பாலும் சனியின் பெயர்ச்சி பொதுவாக மோசமான பலன்களாக கருதப்படுகிறது. ஆனால் சரியான நேரத்தில் சூரியனுடன் இணைவது சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது.
மரியாதை, கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கையை ஆளும் கிரகமாக சூரியன் பொதுவாகக் கருதப்படுகிறது. அதேசமயம் சனிபகவான் கர்மா, நீதி மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. சனிபகவான் சுமார் இரண்டரை வருடங்களாக கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார். மார்ச் 29, 2025 அன்று, சனி கும்பம் ராசியிலிருந்து மீனத்திற்கு மாறுகிறார். ஆனால் ஜனவரி மாத தொடக்கத்திலேயே சூரியன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.

இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரியனும், சனியும் ஒன்றாக பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த அபூர்வ நிகழ்வால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் சூரியனின் சேர்க்கை பல நன்மைகளைத் தரும். வருமானம் அதிகரிப்பதால் மகிழ்ச்சி அடைவார்கள் மற்றும் புதிய வருமானங்களுக்கான கதவுகள் திறக்கப்படும். வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு இப்போது அதற்கான சிறப்பான வாய்ப்புகள் அமையும் மற்றும் விரும்பியபடி மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த வாழ்க்கை அமையும்.
வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். கடந்த கால முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தைக் கொடுக்கும். கடந்த காலங்களில் இருந்து வந்த ஆரோக்கிய பிரச்சினைகளில் விடுபட்டு இப்போது நிவாரணம் பெறலாம். மொத்தத்தில் இது சிறப்பான காலகட்டமாக அவர்களுக்கு இருக்கும்.
ரிஷபம்
சூரியன் மற்றும் சனிபகவானின் சேர்க்கை ரிஷப ராசியினருக்கு பல சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மேலும் அவர்களின் கர்ம நிலையில் இந்த சேர்க்கை நடைபெறுகிறது. இது அவர்களுக்கு பல சிறப்பான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
பணியில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கலாம். புதிய வேலை தேடுபவர்களுக்கும் இது நம்பிக்கைக்குரிய காலகட்டமாக இருக்கும். மேலதிகாரிகள் அவர்களின் செயல்திறன் மற்றும் திறமையைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். குடும்பத்தின் முழு ஆதரவும் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்வார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் சனி பகவானின் சேர்க்கை பல சாதகமான பலன்களைத் தருகிறது. வரப்போகிற ஆண்டில் வாழ்க்கையில் பெரும்பாலும் அவர்கள் எதிர்பார்க்காத நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். அது மட்டுமின்றி அவர்களின் நிதிநிலை வேகமாக முன்னேறும். பல வழிகளிலிருந்து வருமானம் பெறுவீர்கள்.
காதலில் இருப்பவர்களுக்கு இது மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான காலகட்டமாக இருக்கும். அவர்களின் காதல் இப்போது திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. மேலும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் அவர்களின் பல திட்டங்கள் வெற்றி அடையும். நிதி நிலையில் வியக்கத்தக்க உயர்வு அவர்களுக்காக காத்திருக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
