Latest Updates
-
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம்
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் இந்த 3 ராசிக்காரர்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறப்போகுதாம்...!
சனிபகவான் கர்ம பலன்களை வழங்கும் கடவுளாக இருக்கிறார். கர்மத்தின் அதிபதியான சனி, நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியப்பங்கு வகிக்கிறார். எனவே சனிபகவானின் இயக்கத்தில் ஏற்படும் சிறிய மாற்றம் கூட அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் 6 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் உதயமாகிறார். இதன் விளைவாக, சில ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் வாழ்க்கையை அடையப் போகிறார்கள். சனியின் ஒவ்வொரு மாற்றமும் நம் ஒவ்வொருவருக்கும் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இது வாழ்க்கையை எவ்வளவு மாற்றுகிறது என்பது அது எந்த வீட்டில் நிலைபெறுகிறது என்பதைப் பொறுத்தது.

சனிபகவானின் உதயம் செல்வம், சொத்துக்கள், தொழில், வேலை மற்றும் திருமணம் ஆகிய அனைத்து துறைகளிலும் பலன்களைத் தருகிறது. சில ஆச்சரியப்படுத்தும் மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையில் நடக்கப்போகிறது. சனியின் உதயத்தால்தடைகளை உடைத்து சாதனைகளை படைக்கப்போகும் 3 ராசிக்காரர்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொல்லலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த சனிபகவானின் உதயத்தால் பல நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இதன் விளைவாக, ஏழாம் மற்றும் எட்டாம் வீடுகளின் அதிபதியான சனி, அவர்களின் ஒன்பதாம் வீட்டில் உதயமாகிறார். பெரும்பாலும், இந்த ராசிக்காரர்கள் அனைத்து வகையான நிதி நன்மைகளையும் அனுபவிப்பார்கள்.
மாணவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை அனுபவிக்கும் நேரம் இது அவர்கள் வாழ்க்கையிலிருந்த பணக்கஷ்டம் இப்போது முடிவுக்கு வரும். அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிப்பதால், வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும். நீங்கள் மற்றவர்களுக்கு நிதி உதவியும் செய்யலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சகல நன்மைகளும் வந்து சேரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் ஐந்தாவது மற்றும் ஆறாவது வீடுகளுக்கு சனி பகவான் அதிபதியாக இருக்கிறார். இந்த பெயர்ச்சியின் போது அது ஏழாவது வீட்டிற்கு மாறுகிறது. இந்த மாற்றத்தால் அவர்கள் அனைத்து வகையான நிதி நன்மைகளையும் அடையப்போகிறார்கள். பல மகிழ்ச்சியான மாற்றங்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படப்போகிறது. நிலுவையில் உள்ள அனைத்துப் பணிகளையும் முடிக்க இதுவே சிறந்த நேரம்.
வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், ஒரு புதிய வேலை உங்களைத் தேடி வருகிறது. நிதி நிலைமை அவர்கள் முற்றிலும் எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கும். புதிய சொத்து மற்றும் வாகனம் வாங்க இந்த காலகட்டம் சாதகமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் வாழ்வின் அனைத்து துறையிலும் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. வெற்றியை நோக்கிய அவர்களின் பயணம் மிகவும் வேகமாக இருக்கும். மேலும் அவர்களின் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். எனவே அவர்கள் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருப்பார்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியானத் தருணங்களைக் காண்பார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். நீண்ட கால ஆசைகளை நிறைவேற்ற இது மிகவும் பொருத்தமான நேரமாகும். அவர்களின் கடின உழைப்பிற்கான பலனை இப்போது அறுவடை செய்யலாம். அனைத்து பணிகளும் சரியான நேரத்தில் முடிக்கப்படும். இந்த காலகட்டத்தில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் சிறந்த முறையில் நிர்வகிக்கவும், பயன்படுத்தவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
