Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. புத்தாண்டில் ஒவ்வொரு ராசியினரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நடைபெறப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, பல முக்கியமான கிரகங்கள் அடுத்த ஆண்டு தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அதில் அனைவரும் எதிர்பார்க்கும் கிரக மாற்றங்களில் ஒன்று சனிப்பெயர்ச்சி.
மார்ச் 29, 2025 அன்று, சனி கும்பம் ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே சனி அடுத்த வாரம் நட்சத்திர மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி, கர்ம பலன் தரும் சனி, பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார்.

சனிபகவான் ஒரு வருடம் ஒரு நட்சத்திரத்தில் வசிக்கிறார். ராசி மாற்றமாக இருந்தாலும் சரி, நட்சத்திர மாற்றமாக இருந்தாலும் சரி, சனிபகவானின் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
பூரட்டாதி நட்சத்திரத்திற்கு சனியின் வருகையால் சில ராசிக்காரர்கள் நன்மையும், சில ராசிக்காரர்கள் தோஷத்தையும் பெறப்போகிறார்கள். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரங்கள் சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் பலனடையப்போகும் ராசிகாரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் நட்சத்திர மாற்றம் பல நன்மைகளைத் தரப்போகிறது. வேலையில் இருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். அவர்கள் மேலதிகாரிகளின் பாரட்டையும், அங்கீகாரத்தையும் பெறலாம்.
வேலையில்லாத மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்க இது மிகவும் சாதகமான நேரம். குடும்ப உறவுகள் பலப்படும். பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு பொருளாதாரரீதியாக லாபமும், தொழில் வளர்ச்சியும் ஏற்படும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் படிப்பிலும், உத்தியோகத்திலும் அற்புதமான சாதனைகளைப் படைக்கக் கூடிய காலம் இது. இந்த காலகட்டத்தில் படிப்பு விஷயங்களில் இருந்த தடைகள், குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று நினைத்ததை அடைவார்கள். வேலையில் அவர்களின் செயல்திறன் மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும்.
அவர்களின் கடின உழைப்புக்கும் முயற்சிக்கும் பலன் கிடைக்கும். பணப்பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த துலாம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் பணக் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். உறவுகளில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும், மனைவியுடன் நெருக்கம் அதிகரிக்கும். இதுவரை அவர்கள் அடைந்த துன்பங்களுக்கு சனிபகவான் முற்றுப்புள்ளி வைப்பார்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சனியின் இந்த நட்சத்திர மாற்றம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். அவர்கள் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கவலைகள் மற்றும் பதற்றம் நீங்கும். வாழ்க்கையில் இழந்த மகிழ்ச்சியும் அமைதியும் திரும்பும்.
நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். கடந்த காலத்தில் செய்யப்பட்ட முதலீடுகளிலிருந்து நிதிப் பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் நெருக்கமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
