Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
30 ஆண்டுகளுக்கு பின் சனி, புதனால் உருவாகும் சமசப்தக் யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்...
Samsaptak Rajyog 2025 After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் அவ்வப்போது தங்களின் நிலையை மாற்றுவது மட்டுமின்றி, யோகங்களையும் உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு யோகம் உருவாகவுள்ளது.
அதுவும் இந்த யோகமானது சனி பகவான் வக்ரமாகி புதனுடன் சேர்ந்து சமசப்தக் யோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த அற்புதமான யோகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நல்ல முன்னேற்றத்துடன், செல்வத்தில் அதிகரிப்பையும் காணவுள்ளனர்.

மேலும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசித்து, நினைத்ததெல்லாம் நிறைவேறப் போகிறது. இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் சனி, புதனால் உருவாகும் சமசப்தக் யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தக் ராஜயோகமானது வருமானத்தில் நல்ல அதிகரிப்பை கொண்டு வரப்போகிறது. அதோடு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களின் கடின உழைப்பு அலுவலகத்தில் பாராட்டப்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் புத்திசாலித்தனமாக முடிவெடுத்தால், நல்ல பலனைப் பெறலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சமசப்தக் ராஜயோகமானது நல்ல அதிர்ஷ்டத்தையும், நிம்மதியையும் தரும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பண பிரச்சனைகள் படிப்படியாக குறையும். தேவையற்ற செலவுகள் குறையும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சுப காரியங்களில் அதிகம் பங்கேற்பீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சமசப்தக் ராஜயோகமானது புகழ், வெற்றி மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டு வரும். அதாவது சமூகத்தில் புகழும், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். புத்திசாலித்தனத்தால் உங்களின் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்பின் பலன்களைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப சூழல் இனிமையாக இருக்கும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஜூலை மாதம் வணிகம் மற்றும் வேலை இரண்டிலும் சிறப்பான பலனைத் தரும் காலமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications