Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகள் கழித்து சனி பகவான் உருவாக்கும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் பணப்பிரச்சனை தீரும்!
Saturn Mercury Make Navpancham Rajyog On 23 November 2025: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதாவது இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர். இதனால் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமாக தெரியும்.
மேலும் சனி பகவான் நீண்ட காலம் ஒரு ராசியில் இருப்பதால், மற்ற கிரகங்களுடன் சேரும் போது, சில சமயங்களில் சக்திவாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் நவம்பர் மாத இறுதியில் புதனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

ஜோதிடத்தின் படி, சனி பகவானும், புதனும் நவம்பர் 23 ஆம் தேதி ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த நாளில் தான் புதன் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனியும், புதனும் ஒருவருக்கொருவர் 9 மற்றும் 5 ஆவது வீடுகளில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ஒவ்வொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு சிறப்பாக இருக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு காரணமாக முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில், நிதி மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இருப்பினும் இந்த கடைசி கட்டத்தால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டு சூழல் அமைதியாக இருக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சொத்து தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இருந்தாலும், ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி மற்றும் புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும். வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும். தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். மொத்தத்தில் நிதி நிலை வலுபெறும், வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
