Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகளுக்கு பின் சனி புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது...
Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் சேர்ந்தோ அல்லது நிலையின் மூலமோ அல்லது பார்வையினாலோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்கு சனி பகவான் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில் இந்த சனி பகவான் புதனுடன் சேர்ந்து ஒரு அற்புதமான ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இந்த ராஜயோகமானது அக்டோபர் மாதத்தில் உருவாகவுள்ளது.

ஏனெனில் அக்டோபர் புதன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சனி மற்றும் புதனின் நிலைகளால் நவபஞ்ச ராஜயோகமானது உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, திடீர் பண வரவும், தொழிலில் இரட்டிப்பு லாபமும் கிடைக்கப் போகிறது. அதோடு சிக்கிய பணமும் கைக்கு வரப்போகிறது. இப்போது சனி புதனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரப் போகிறது. குறிப்பாக தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புனித யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
ரிஷபம்
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோகமானது ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசிக்க வைக்கப்போகிறது. குறிப்பாக வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மிதுனம்
சனி மற்றும் புதனின் நவபஞ்ச ராஜயோகமானது மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருவித பிரகாசத்தை கொண்டு வரும். திடீரென்று பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் இலக்குகளை திறம்பட அடைவீர்கள். எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
