Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
சனி, புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: ஜூன் 28 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க..
Saturn Mercury Make Navpancham Rajyog 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் ஜூன் 22 முதல் கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி புதனும், சனியும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் வந்து, நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
குறிப்பாக சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீர் நிதி நன்மைகளையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். அதே சமயம் திருமணமான தம்பதிகள் குழந்தைகள் தொடர்பான நற்செய்திகளையும் பெறவுள்ளனர். இப்போது சனி புதனால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களை கொண்டு வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. தொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. அதாவது, அதிர்ஷ்டத்தின் ஆதரவால் இந்த ராசிக்காரர்களின் பல முக்கியமான வேலைகளில் வேகமாக நடைபெறும். ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொண்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல செய்திகளைப் பெறக்கூடும். வசதிகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் நல்ல பலனைத் தரும். வருமானத்தில் நல்ல உயர்வைக் காணக்கூடும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வசதிகள் அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications