Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
30 ஆண்டுகள் கழித்து கும்பத்தில் சனி-புதன் இணைவதால் 2025-ல் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
Saturn Mercury Conjunction 2025: வேத ஜோதிடத்தின் படி, 2025 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். ஏனெனில் இந்த ஆண்டில் பல முக்கியமான கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதோடு சில கிரகங்களின் அரிய சேர்க்கை நிகழவுள்ளன. இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தைக் காணக்கூடும்.
பஞ்சாங்கத்தின் படி, 2025 ஆம் ஆண்டில் 2 கிரகங்களின் சேர்க்கை நிகழவுள்ளது. அதுவும் இரண்டு நட்பு கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளன. இந்த சேர்க்கையானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. அதுவும் கும்ப ராசியில் இந்த சேர்க்கை ஏற்படவுள்ளது.

ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசிக்கு புத்திகாரகனான புதன் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ளார். இவ்விரு கிரகங்களும் நட்பு கிரகங்கள் என்பதால், சில ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம், நிதி தொடர்பான விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி புதன் சேர்க்கையால் 2025 ஆம் ஆண்டில் புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நிதி நிலை வலுவடையும். அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் பிள்ளைகள் படிப்பிலும், தொழிலிலும் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். மொத்தத்தில் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், பிரகாசமாகவும் இருக்கப் போகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி புதன் சேர்க்கையானது வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வரப்போகிறது. உறவுகள் வலுவடையும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண உதவும் பல புதிய நபர்களை சந்திப்பீர்கள். எழுத்து, ஊடகம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். சனி பகவானின் ஆசியால், இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் சனி புதன் சேர்க்கையால் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. மேலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண முயற்சிகள் வெற்றி அடையும். சனி மற்றும் புதனின் ஆசியால் வாழ்க்கையில் வெற்றியும், செல்வமும் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications