Latest Updates
-
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க..
76 நாட்கள் பலவீனமாக இருக்கும் சனி பகவான்: பிப்ரவரி வரை இந்த 3 ராசிக்கு வாழ்க்கையில் பிரச்சனையே இருக்காது!
Saturn Loses Power For 76 Days: ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் அவ்வப்போது வக்ர கதியிலும் பயணிப்பார். அந்த வகையில் சனி பகவான் நவம்பர் 28 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்தார். இப்படி சனி பகவான் வக்ர கதியில் இருந்து வக்ர நிவர்த்தி அடைந்ததால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரிந்தது.
மேலும் இந்த சனி பகவான் டிசம்பர் 05 ஆம் தேதி முதல் பலவீனமான நிலையில் பயணித்து வருகிறார். அதுவும் இந்நிலையில் சுமார் 76 நாட்கள் வரை இருப்பார். இதனால் இக்காலத்தில் இதுவரை ஏழரை சனி, அஷ்டம, அர்த்தாஷ்டம சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதன் தாக்கத்தில் இருந்து சற்று விடுதலை பெற்று, வாழ்க்கையில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். சனி பகவான் இப்படி பலவீனமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரிந்தாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.

ஜோதிடத்தில் ஒரு கிரகத்தின் பலம் 0 டிகிரி முதல் 30 டிகிரி வரை இருக்கும். அதில் 0 டிகிரியில், ஒரு கிரகம் வலுவிழந்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் இருந்தால், அந்த கிரகம் எந்த பலன்களையும் தராமல் இருக்கும். அதுவும் ஒரு கிரகம் 0 டிகிரி முதல் 6 டிகிரி வரை இருந்தால், அது அதன் "குழந்தைப் பருவ" கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் வலுவான பலன்களைத் தராது.
டிசம்பர் 05 ஆம் தேதி சனி பகவான் 0 டிகிரிக்கு வந்ததோடு, 2026 பிப்ரவர் 20 ஆம் தேதி சனி பகவான் 6 டிகிரிக்கு நகர்வார். இக்காலத்தில் சனி பகவானால் கடுமையான பலன்களைத் தர முடியாது மற்றும் இதுவரை சனியால் சிரமப்பட்டு வந்தவர்கள் அதிலிருந்து விடுதலை பெறுவார்கள். இப்போது சனி பகவான் வலுவிழந்து இருப்பதால் எந்த ராசிக்கு சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், தற்போது 6 ஆவது வீட்டில் பயணித்து வருகிறார். இந்த வீட்டில் சனி வலுவிழந்து இருப்பதால், மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். படிப்பில் இருந்த தடை நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
12 ஆவது வீட்டில் சனியின் பார்வை விழுவதால், வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. கடன் சுமை குறையும். நிதி நிலை வலுபெறும். மறைமுக எதிரிகள் பலவீனமாவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி பகவான் பயணித்து வருகிறார். இந்த வீடு செல்வம், பேச்சு, குடும்பம் மற்றும் பரம்பரைக்கு உரிய வீடாகும். இந்த வீட்டில் சனி பகவான் பலவீனமாக இருப்பதால், தேவையற்ற செலவுகள் குறையும். சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் ஆரோக்கிய பிரச்சனைகள் தீர்ந்து, உடல்நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். மன அமைதி அதிகரிக்கும், செழிப்பும் உண்டாகும். பேச்சுத்திறன் மேம்படும். நற்பெயர் அதிகரிக்கும்.
கும்ப ராசியின் 4, 8, 11 ஆகிய வீடுகளில் சனி பகவானின் பார்வை விழுவதால், பொருள் ஆறுதல், அதிர்ஷ்டம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும். அரசியல் அல்லது பொதுப் பணிகளில் இருப்பவர்கள் வலுவான பொது ஆதரவைப் பெறுவார்கள். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். மன அழுத்தம் குறையும்.
மீனம்
மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இந்த வீட்டில் சனி பகவான் பலவீனமான நிலையில் இருப்பதால், அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும். வேலைகள் ஒவ்வொன்றும் வேகமாக நடக்கும். தேவையற்ற செலவுகள் குறையும்.
நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். உறவுகளில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். ஒட்டுமொத்தமாக, சனி பகவானால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications