Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
500 ஆண்டுகளுக்கு பின் சனி, புதனின் நிலையில் ஏற்படும் மாற்றம்: நவம்பரில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Saturn Direct And Mercury Retrograde After 500 Years: ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கங்கள், அம்சங்கள், சேர்க்கைகள் போன்றவை மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவகிரங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர்.
இந்த சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் சனி பகவான் பயணித்து வருகிறார். அதே வேளையில் புத்திகாரகனான புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இவ்விரு கிரகங்களுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது.

அப்படிப்பட்ட புதன் நவம்பரில் வக்ர நிலையிலும், சனி வக்ர நிவர்த்தி அடைந்தும் பயணிக்கவுள்ளனர். அதாவது இவ்விரு கிரகங்களும் எதிரெதிர் திசையில் நகர்வார்கள். இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த கிரகங்களின் நிலைகளால் அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். அதுவும் திடீர் நிதி ஆதாயங்களும், முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களும் கிடைக்கும். மேலும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
நவம்பரில் மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைந்தும், 6 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவும் இருப்பார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். படைப்பாற்றல் மற்றும் தலைமைத்துவ திறன்கள் மேம்படும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். புதிய பொறுப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை தொடங்கினால் அதில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
நவம்பரில் ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைந்தும், 7 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவும் இருப்பார்கள். இதனால் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பேச்சாற்றல் மேம்படும். புதிய திட்டங்களை தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
நவம்பரில் கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடைந்தும், 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிலையிலும் இருப்பார்கள். இதனால் அவ்வப்போது திடீர் நிதி நன்மைகள் கிடைக்கும். நிதி நிலையில் எதிர்பாராத அளவில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இருக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
