Latest Updates
-
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
100 ஆண்டுக்கு பின் சனிபகவான் உருவாக்கும் தன ராஜயோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இதுதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுமே குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது சில சமயங்களில் நேர்மறையான மாற்றங்களாகவும், சில சமயங்களில் எதிர்மறையான மாற்றங்களாகவும் இருக்கலாம்.
கிரகங்களின் நீதிபதி என்று அழைக்கப்படும் சனி பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். தீபாவளி 2025 அன்று, சனிபகவான் 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய மற்றும் சக்திவாய்ந்த தன ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த ஜோதிட நிகழ்வு குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பெரும் செல்வத்தையும், வெற்றியையும் தரப்போகிறது.

சனிபகவானின் இந்த கிரக மாற்றம் ஜோதிடத்தில் நிதி வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஒரு நல்ல நேரத்தைக் குறிக்கிறது. இந்த பதிவில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் ராஜயோகத்தால் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
தீபாவளியன்று சனிபகவான் உருவாக்கும் தன ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் பல சாதகமான பலன்களை அனுபவிப்பார்கள். அவர்களின் அதிர்ஷ்டத்திற்கும். கர்மாவிற்கும் அதிபதியான சனிபகவான் அவர்களின் லாப வீட்டில் இருப்பார். இதன் விளைவாக அவர்களின் வருமானம் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். வியாபாரத்தில் எதிரிகளை வீழ்த்தி அவர்கள் பெரிய லாபத்தை அடைவார்கள்.
சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தும், மரியாதையும் உயரும். கடந்த கால முதலீடுகளிலிருந்து லாபம் அடைவார்கள். தங்கம், நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளது. அவர்களின் புதிய முயற்சிகள் அனைத்தும் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்கும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்க இது சரியான காலமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்கள் உங்களுக்காக காத்திருக்கின்றன.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தன ராஜயோகத்தால் நல்ல பலன்களை அனுபவிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சனிபகவான் அவர்கள் ராசியின் மூன்றாவது வீட்டிற்குப் பெயர்ச்சி அடைகிறார். மூன்றாவது வீடு தொடர்பு கொள்ளும் திறன், உடன்பிறப்புகள், முயற்சி மற்றும் தைரியத்தைக் குறிக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும், மேலும் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
அவர்கள் வேலை மற்றும் தொழிலில் துணிச்சலான முடிவுகளை எடுபபார்கள், இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். தன்னம்ம்பிக்கையுடன் எடுக்கும் முயற்சிகள் அவர்களுக்கு நிதி ஆதாயங்களைத் தரும்.
அவர்களின் எதிரிகளை வீழ்த்தி வெற்றியை நிலைநாட்ட பிரகாசமான வாய்ப்புகள் உருவாகும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடன்பிறப்புகளின் ஆதரவு அதிகரிப்பதால் அவர்கள் குடும்பத்தில் அமைதியும், நிம்மதியும் நிறைந்திருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு தன ராஜயோகம் பல வழிகளில் நன்மைகளைத் தரப்போகிறது. புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். வேலையில்லாதவர்கள் அல்லது தற்போதைய வேலையில் அதிருப்தி அடைந்தவர்கள் சிறந்த வேலையைப் பெறலாம். பல வழிகளில் வருமானம் வருவதால் நிதிநிலை இரட்டிப்பாகும். அவர்கள் நினைத்தபடி அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக முடிக்கலாம். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால் அவர்கள் திடீர் லாபத்தை அடைய முடியும்.
அலுவலகத்தில் சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அவர்களின் நற்பெயரும், அதிகாரமும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், அவர்கள் விரும்பிய வேலையை அடையலாம். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் திருமணம் கூடிவரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

