Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
ராகு கும்ப ராசி செல்வதால் 2025-ல் இந்த 3 ராசிக்காரர்கள் இரட்டை ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...உங்க ராசி என்ன?
Rahu Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் ஒருவிதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இதில் ராகு மற்றும் கேது போன்ற நிழல் கிரகங்களும் அடங்கும். இவை நிழல் கிரகங்களாக இருந்தாலும், ஜோதிடத்தில் அவை முக்கியமானதாக கருதப்படுகிறது. மற்ற கிரகங்களைப் போலல்லாமல், இந்த கிரகங்கள் எப்போதும் பின்னோக்கி நகர்கின்றன.
2025-ல் ராகு கும்ப ராசியில் நுழைகிறார். தற்போது மீன ராசியில் சஞ்சரிக்கும் ராகு பின்னோக்கி நகர்ந்து சனிபகவான் ஆளும் ராசியான கும்பத்தை அடைகிறார். ராகுவின் இந்த சஞ்சாரம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் ராகு சஞ்சாரம் சில ராசிகளுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025-ல் ராகுவின் சஞ்சாரம் சாதகமான பலன்களை அளிக்கும். இந்த ராசியின் வருமானம் மற்றும் லாபம் தொடர்பான அம்சத்தை ராகு பாதிக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பலமடங்கு உயரும். கடன் சுமைகளை இப்போதும் பெருமளவு குறைத்து இப்போது நிம்மதியான வாழ்வை வாழலாம்.
முதலீடு செய்வதற்கும் சொத்துக்களை வாங்குவதற்கும் இது மிகவும் நல்ல நேரம். பங்குச் சந்தை, லாட்டரி மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் 2025-ல் ராகுவின் நற்பலன்களை அனுபவிக்கலாம். இந்த பெயர்ச்சியால் அவர்கள் நிதி ஆதாயம், செலவினங்களின் குறைவு, வாழ்வில் பலவித சுகபோகங்கள், துன்பங்கள் குறைவு என அனைத்து நன்மைகளையும் அவர்கள் அனுபவிக்கலாம். மேலும், மகர ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் பேச்சுத்திறனும், படைப்பாற்றலும் அதிகரிக்கும். அனைவரையும் கவரும் வகையில் அவர்கள் பேசுவார்கள்.
2025 ஆம் ஆண்டு குடும்ப உறவுகள் வலுப்பெறும் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கி தம்பதிகளுக்கு இடையில் நெருக்கம் அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டு புதிய வீடு அல்லது பிற சொத்துக்களை வாங்குவதற்கும் முதலீடு செய்வதற்கும் சாதகமான ஆண்டாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் வக்ர பெயர்ச்சியும், ராகு கும்பத்தை அடைவதும் நற்பலன்களைத் தரும். ரிஷப ராசியின் கர்ம நிலையில் ராகு பெயர்ச்சி நடைபெறுகிறது. தொழில், வியாபாரம் போன்றவற்றில் அதிர்ஷ்டம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்கள் நிறைய பயணம் செய்ய வேண்டியிருக்கும், ஆனால் அவை அவர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். புதிய தொழில்கள் தொடங்க வாய்ப்புகள் உருவாகும்.
ராகு பெயர்ச்சி காலம் புதிய தொழில் தொடங்கவும், பழைய தொழில்களை விரிவுபடுத்தவும் சிறந்த காலமாகும். பொருளாதார நிலை மேம்படும். செலவுக்கு ஏற்ப வருமானம் இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அதிகம். திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
