Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
84 ஆண்டுகள் கழித்து பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியும்!
Navpancham Rajyog On Pongal 2026: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றில் காரணியாவார். கிரகங்களில் சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
தற்போது சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியில் சுக்கிரன் பயணிக்கும் போது மற்ற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குவார். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்.

அந்த வகையில் பொங்கல் அன்று சுக்கிரன் ஜனவரி 15 ஆம் தேதி யுரேனஸுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார். இந்த யோகத்தின் போது சுக்கிரனும் யுரேனஸும் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் இருக்கும். இவ்வாறு உருவாகும் யோகத்தால் சில ராசிக்காரர்கள் நல்ல வெற்றியையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர்.
ஜோதிடத்தின் படி, யுரேனஸ் தற்போது ரிஷப ராசியில் உள்ளது. இந்த யுரேனஸ் ஒரு ராசியில் 7 ஆண்டுகள் வரை இருக்கும். இதன் விளைவாக யுரேனஸ் ஒரு சுழற்சியை முடிக்க சுமார் 84 ஆண்டுகள் ஆகும். இப்போது பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் ரிஷப ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும்.
மகரம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் வேலை மற்றும் வியாபாரத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். வணிகர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பல புதிய வருமான வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
மிதுனம்
பொங்கல் நாளில் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். நீண்ட கால பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். படைப்புத் திறன்கள் மேம்படும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications