Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Planets Transit In April 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த ஏப்ரல் மாதத்தில் சனி பகவான் மீன ராசியில் உதயமாகவுள்ளார்.
அதே வேளையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மேஷ ராசிக்கு செல்லவிருக்கிறார். முக்கியமாக ஏப்ரல் 03ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்கும், ஏப்ரல் 06 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் உதயமாகவும் உள்ளனர். அதன் பின் ஏப்ரல் 07 ஆம் தேதி புதன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதோடு ஏப்ரல் 13 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

அடுத்ததாக ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவுள்ளார். இப்படி 5 கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலு ம் தெரியும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது 2025 ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும். சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்ததால், இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் வருமானத்தில் மிகப்பெரிய உயர்வு ஏற்படும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் மங்களகரமானதாக இருக்கும். சனி பகவான் மீன ராசிக்குள் நுழைந்ததால் அஷ்டம சனியில் இருந்து விடுதலை கிடைத்திருக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மன அமைதி கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
