Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Personality Test: நீங்க பிறந்த நேரம் என்னனு சொல்லுங்க... உங்க எதிர்காலம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்...!
Personality Test: ஒருவரின் ஆளுமை எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள பல நூற்றாண்டுளாக ஜோதிட சாஸ்திரம் மக்களுக்கு உதவியாக இருந்து வருகிறது. ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் பிறந்த ராசியின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள், அவர்கள் ஆளுமையின் ரகசியங்களை கணிக்கிறது.
ஒருவரின் பிறந்த ராசி போலவே அவர்களின் பிறந்த தேதியும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று நியூமராலஜி கூறுகிறது. ஆனால் இவை மட்டுமின்றி ஒருவரின் ஆளுமையை தெரிந்து கொள்வதில் ஒருவரின் பிறந்த நேரமும் முக்கியமானதாக இருக்கிறது என்பது நம்மில் பலரும் அறியாதது.

உண்மைதான், ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் அடிப்படை ஆளுமை என்னவென்று தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் ஒருவரின் பிறந்த நேரத்தின் அடிப்படையில் அவர்கள் எப்படிப்பட்டவராக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
காலை 6.00 மணி முதல் 8.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் இயற்கை அன்பான ஆன்மாக்களாக இருப்பார்கள். அவர்கள் உலகில் அன்பையும் அக்கறையையும் பரப்புவதை அவர்கள் இலட்சியமாக கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும், அவர்கள் தங்கள் மனக்காயங்களை தானே சரிசெய்து கொள்ள அதிக தனிமையை விரும்புபவர்களாக இருப்பார்கள்.
காலை 8.00 மணி முதல் 10.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்க்கையை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அவர்களின் முதல் பாதி வாழ்க்கையை விட இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கும். வாழ்க்கை ஒரு சிறிய பயணம் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதை நன்றாக வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் சிறந்த தொழிலதிபர்களாக இருப்பார்கள். அவர்கள் ஆடம்பர வாழ்க்கையை விரும்புகிறார்கள் மற்றும் அதை அடைய கடினமாக உழைக்கிறார்கள். இந்த நேரத்தில் பிறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் தொழிலில் ராஜாவாக இருப்பார்கள் மற்றும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்குவார்கள்.
மதியம் 12:00 மணி முதல் முதல் 2:00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள், தலைசிறந்த படைப்பாற்றல் மிக்கவராக இருக்கலாம். மேலும் அவர்கள் சிறந்த தலைமத்துவ திறன் கொண்டவராகவும் மற்றும் மக்களை வழிநடத்தும் அனைத்து பண்புகளையும் கொண்டிருப்பார்கள். நிர்வாகம் மற்றும் படைப்பாற்றல் துறைகளில் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கலாம்.
2:00 மணி முதல் 4:00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக பிறந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. பரம்பரை சொத்துக்கள் அல்லது திடீர் அதிர்ஷ்டத்தால் அவர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், அவர்கள் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்கள் மற்றும் எப்போதும் மற்றவர்களை சார்ந்து இருப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதில் அவர்கள் வல்லவர்கள். மேலும், இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் திருமண வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். திருமணமாகி செட்டிலாவதை தங்கள் வாழ்க்கை இலட்சியமாக கருதுவார்கள்.
மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு எளிதில் ஆளாகிறார்கள். உணவு தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். வேலையில் அவர்களின் செயல்திறன் எப்போதும் மோசமாக இருக்கும். அவர்களுக்கு புத்திக்கூர்மை சிறப்பாக இருந்தாலும், நிலையான உடல்நலப் பிரச்சினைகள் அவர்களை சாதனைகளிலிருந்து வெகுதூரத்தில் வைக்கின்றன.
இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அமைதியின் உருவமாக இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் முக்கிய நோக்கம் மற்றவர்களை மகிழ்விப்பதாகும். அதற்காக அவர்கள் எதற்கும் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொழுதுபோக்கு துறையில் சிறந்த விளங்குவார்கள்.
இரவு 10.00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் குடும்பத்தின் சுமைதாங்கியாக மாறுகிறார்கள். அவர்கள் வலிமையானவர்கள் மற்றும் ஆபத்துக்களை சந்திக்க பயப்பட மாட்டார்கள். அவர்கள் நல்ல தலைவர்களாக இருப்பார்கள் மற்றும் மக்களை ஒன்றாக வைத்திருப்பதில் திறமையானவர்கள். அவர்களைப் போன்ற குணம் உள்ளவர்களை மணந்தால் அவர்களின் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும்.
நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 4.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், அவர்கள் தங்கள் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள் மற்றும் அதற்கு தேவையான அனைத்து திறன்களையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், அவர்கள் யாரிடமும் பணிந்து செல்ல மாட்டார்கள், அது எவ்வளவு லாபமாக இருந்தாலும், அவர்களின் சுயமரியாதை அவர்களுக்கு மிகவும் முக்கியமானது.
அதிகாலை 4.00 மணி முதல் 6.00 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தோற்றத்திற்கு அதிக கவனம் செலுத்துபவராக இருக்கிறார்கள், மேலும் அவர்கள் எப்போதும் அழகாக இருக்க முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஒரு சக்திவாய்ந்த ஆளுமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நன்கு அறிவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












