Latest Updates
-
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
இந்த 4 ராசிக்காரங்க எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டா சமாளிப்பாங்களாம்...
நமது வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளை நாம் ஒவ்வொருவரும் கடந்திருப்போம். அதில் சிலர் மிகவும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் போது, சற்றும் மனம் தளராமல் தைரியமாக அந்த சூழ்நிலையை சமாளிப்பார்கள். இப்படி ஒருவர் தைரியமாக இருப்பதற்கு அவர்களின் ராசியும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஏனெனில் ஜோதிடத்தின் படி, ஒருவர் பிறக்கும் போது கிரகங்களின் நிலைகளால் ஒருவரது ராசி தீர்மானிக்கப்படுகிறது. இந்த ராசிகள் ஒவ்வொன்றும் அதிபதிகளைக் கொண்டுள்ளன. இந்த அதிபதிகள் அந்த ராசியைச் சேர்ந்தவர்களின் குணத்தை தீர்மானிக்கின்றன.

அந்த வகையில் சில ராசிக்காரர்கள் இயற்கையாகவே மன வலிமையுடனும், எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை பொறுமையாக கையாளும் திறனையும் கொண்டுள்ளார்கள். இப்போது அப்படி கடினமான சூழ்நிலைகளை அசால்ட்டாக சமாளிக்கும் திறனைக் கொண்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
எவ்வளவு கடினமான சூழ்நிலைகளையும் கையாளும் விஷயத்தில் சிறந்தவர்களாக முதலிடத்தில் இருப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் பொறுமைசாலி. எவ்வளவு மோசமான சூழ்நிலையையும் அமைதியாக கையாள்வார்கள்.
ஒரு விஷயத்தை எடுத்தால், அதைப் பற்றி முழுமையாக அறிந்த பின்னரே முடிவை எடுப்பார்கள். இப்படியான குணம் தான் இவர்களை கடினமான சூழ்நிலைகளிலும் திறம்பட சமாளிக்க வைக்கிறது. மேலும் சவாலான சூழ்நிலைகளால் வரும் மன அழுத்தம் இருந்தபோதிலும், மகர ராசிக்காரர்கள் தங்கள் மீள்தன்மை மற்றும் வலிமையை வெளிப்படுத்தி, உயர்ந்து நிற்கிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும், அவர்களின் பொறுமை மற்றும் அமைதியான குணத்தால், எளிதில் சமாளிப்பார்கள். மேலும் இவர்கள் நடைமுறை சிந்தனையாளர்கள். பிரச்சனை கைமீறி போனாலும், அவர்கள் பீதியடையாமல், சற்றும் பதட்டப்படாமல் அமைதியாக இருந்து, தெளிவான மனதிலும், சிறப்பான திட்டத்துடனும் பிரச்சனைகளை அணுகி தீர்வு காண்பார்கள். இந்த ராசிக்காரர்களின் மிகச்சிறந்த குணம் பொறுமை. இந்த பொறுமை தான் இவர்களின் மன தைரியத்துக்கு முக்கிய காரணம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்களும் கடினமான சூழ்நிலைகளை திறம்பட சமாளிக்கக்கூடியவர்கள். இவர்களின் சமயோசிதமான தன்மை மற்றும் உள்ளுணர்வு இயல்பு அவர்களை சிறந்த பிரச்சனை தீர்க்கும் திறன் கொண்டவர்களாக ஆக்குகிறது. இவர்கள் சவாலில் இருந்து அரிதாகவே பின்வாங்குவார்கள்.
மேலும் இந்த ராசிக்காரர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தடைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தும் நம்பமுடியாத திறனைக் கொண்டுள்ளனர். கடினமான சூழ்நிலைகளிலும் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் இருப்பதால், இவர்களால் பிரச்சனைக்கு தீர்வு காண முடிகிறது. மொத்தத்தில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து, அந்த நிலைமையை மாற்ற யாராவது தேவைப்பட்டால், அதற்கு விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்தவர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களும் கடினமான சூழ்நிலைகளை எளிதாகக் கடந்து செல்லக்கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் ஒரு பிரச்சனையை சந்தித்தால், அதை வெவ்வேறு கோணங்களில் பார்க்கக்கூடியவர்கள். இதனால் மற்றவர்களை விட மிகச்சிறந்த தீர்வுகளை கண்டறிவார்கள்.
இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் பெயர் பெற்றவர்கள். பிரச்சினைகளைத் தீர்க்கத் தேவையான முயற்சிகளைச் செய்வதில் அவர்கள் தயங்க மாட்டார்கள். சிரமங்களை எதிர்கொள்ளும்போது, கன்னி ராசிக்காரர்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications