Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமும், திறமையும் இருக்காம்...!
ஆடம்பரமான பணக்கார வாழ்க்கை வாழ வேண்டுமென்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கும், ஆனால் அந்த ஆசை நிறைவேற வெறும் ஆசை மட்டும் போதாது. கடின உழைப்பு, புத்திக்கூர்மை, விடாமுயற்சி மற்றும் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின் படி அதிர்ஷ்டவசமாக சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இந்த குணங்கள் இயற்கையாகவே இருக்கும்.
ஜோதிடத்தில் ஒருவரின் பிறந்த ராசி மற்றும் நட்சத்திரம் போலவே அவர்கள் பிறந்த மாதமும் முக்கியமானதாகும். எனவே குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் செல்வத்தை இயற்கையாகவே எளிதில் ஈர்ப்பார்கள், சொல்லப்போனால் அவர்கள் 40 வயதிற்கு முன்னாடியே கோடீஸ்வரர் ஆவதற்கு வாய்ப்புள்ளது.நீங்கள் விரைவில் பணக்காரர் ஆன பலரை கவனித்துப் பார்த்தால் அவர்கள் இந்த மாதங்களில் ஒன்றில் பிறந்தவராக இருக்க வாய்ப்புள்ளது. இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்கு முன்னரே கோடீஸ்வரராவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ரிஸ்க் எடுக்க ஒருபோதும் பயப்படுவதில்லை. அவர்களுக்கு எந்த விஷயத்திற்காகவும் காத்திருப்பது பிடிக்காது, குறிப்பாக செல்வத்திற்காகவும், வெற்றிக்காகவும் காத்திருப்பது அறவே பிடிக்காது, எனவே அவர்கள் வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இயற்கையாகவே தலைவருக்குரிய குணங்கள் இருக்கும். அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் மற்றும் தங்கள் முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டார்கள்.
ஜனவரியில் பிறந்தவர்கள் பெரிய ரிஸ்க் எடுக்க பயப்படுவதில்லை. மற்றவர்கள் ஒரு விஷயத்தை செய்ய தயங்கி நிற்கும் போது, அவர்கள் அதிரடியாக செயல்பட்டு அந்த விஷயத்தை செய்து முடிப்பார்கள். அவர்களிடம் அதிக ஆற்றலும் தன்னம்பிக்கையும் இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் 40 வயதிற்கு முன்பே கோடீஸ்வரராகி விடுவார்கள்.
பிப்ரவரி
காதலைக் கொண்டாடும் பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புகிறார்கள். பணத்தை சேமிப்பதிலும் முதலீடு செய்வதிலும் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். வாழ்க்கையில் வெற்றிக்கு அதிக நேரம் எடுக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள், அதற்காக காத்திருக்கும் அளவுக்கு அவர்களிடம் பொறுமையும் உள்ளது.
பிப்ரவரியில் பிறந்தவர்கள் பணத்திற்காக வேலை செய்வதில்லை, மாறாக அவர்கள் பணத்தை அவர்களுக்காக வேலை செய்ய வைக்கிறார்கள். அவர்கள் தங்கள் செல்வத்தை வளர்க்க வணிகங்களில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் தங்கள் கையிலிருக்கும் செல்வத்தை இழக்க மாட்டார்கள். நீங்கள் இந்த மாதத்தில் பிறந்திருருந்தால், 40 வயதிற்குள் கோடீஸ்வரராக மாறுவதற்குத் தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் நட்சத்திரம் போல ஜொலிக்க பிறந்தவர்கள். அவர்களின் திறமையும், வசீகரமும் செல்வத்தை ஈர்க்கிறது. அவர்கள் அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் மற்றவர்களை வழிநடத்துவதில் சிறந்தவர்கள். அவர்கள் சிறந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்ற உயர்ந்து அந்தஸ்து உள்ள பதவிகளில் ஜொலிப்பார்கள்.
அவர்கள் மக்களுடன் இணைவதில் சிறப்புத் திறனைக் கொண்டுள்ளனர். உறவுகளை எவ்வாறு உருவாக்குவது மற்றும் சிறந்த நிதி வாய்ப்புகளைக் கண்டறிவது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆடம்பரம் மற்றும் வெற்றியின் மீதான அவர்களின் அன்பு அவர்களை கடினமாக உழைக்கத் தூண்டுகிறது. இதன் காரணமாக, பல ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் 40 வயதிற்கு முன்பே பணக்காரர்களாகிவிடுகிறார்கள்.
அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் வெற்றிக்காவே கட்டமைக்கப்பட்டவர்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கமானவர்கள், கடின உழைப்பாளிகள், அர்ஜுனன் போல எப்போதும் தங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துபவர்கள். அவர்கள் ஒருபோதும் நேரத்தை வீணாக்க மாட்டார்கள், அவர்கள் தங்கள் கனவுகளில் எப்போதும் உறுதியாக இருப்பார்கள்.
அவர்கள் புத்திசாலிகள் மற்றும் பொறுமையானவர்கள் என்பதால் வணிகத்திலும் நிதியிலும் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் விரைவான பணத்தைத் தேடுவதில்லை, ஆனால் நீண்ட கால வெற்றியை உருவாக்குகிறார்கள். அவர்களின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் 40 வயதை அடைவதற்குள் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாற உதவுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












