Latest Updates
-
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
நியூமராலஜி படி இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் அனைவரையும் ஆட்டிப்படைப்பார்களாம்...!
Numerology: நம்முடைய பிறந்த தேதி என்பது நம்முடைய வாழ்நாள் முழுவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒருவரின் தலைவிதி பிறப்பால் தீர்மானிக்கப்படுகிறது. எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு பகுதியாகும், இது எண்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. நியூமராலஜியில் பிறந்த நேரம், பிறந்த தேதி என அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நியூமராலஜி படி ஒவ்வொருவருக்கும் ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் விதி எண் நிர்ணயிக்கப்படுகிறது.விதி எண் என்பது பிறந்த தேதியின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். உதாரணமாக, 17 ஆம் தேதி பிறந்தவரின் பிறப்பு எண் 1+7 = 8. அதேசமயம் ஒருவரின் பிறந்த தேதி 5 ஆக இருந்தால் அவர்களின் விதி எண் 5 தான். ஒருவரின் விதி எண் எப்போதும் ஒற்றைப்படை எண்ணாகவே இருக்கும்.

சனிபகவானுக்கு பிடித்த எண்
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவானுக்கு மிகவும் முக்கியமான இடம் உண்டு. சனிபகவான் ஒருவரின் கர்ம பலன்களைப் பொறுத்து பலனளிக்கிறார், அதனால்தான் சனிபகவான் ஒவ்வொரு முறை தனது ராசியை மாற்றும்போது அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஒருவரின் ராசியில் தவறான வீட்டில் சனிபகவான் வந்தால் அவர்கள் வாழ்க்கையில் அனைத்துவிதமான துன்பங்களையும் அனுபவிப்பார்கள். ஆனால் சில தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள்.
சனிபகவானின் முழு ஆசிபெற்ற எண் 8 ஆகும். விதி எண் 8 உள்ளவர்கள் வாழ்வில் சனிபகவானின் அருள் எப்போதும் இருக்கும். எந்தவொரு மாதத்திலும் 8, 17 மற்றும் 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் விதி எண் 8 ஆக இருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். சனி அவர்களின் முயற்சிகளை எப்போதும் அங்கீகரிப்பார். அவர்களுக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தின் ஆதரவு இருக்கும். இவர்கள் அதிர்ஷ்டத்தை விட தங்கள் உழைப்பை நம்பி கடினமாக உழைப்பவர்கள்.

8 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்
எண் கணிதத்தின் படி, பிறந்த எண் 8 ஆக இருப்பவர்கள், சனிபகவானுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் பணத்திற்கோ, செல்வத்திற்கோ குறைவிருக்காது. பூமியில் உள்ள அனைத்து பொருள் இன்பத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. அவர்கள் அனைத்து விஷயத்தையும் ஆழமாக சிந்திப்பவர்களாக இருப்பார்கள்.
அவர்களின் வாழ்க்கை சில விருப்பங்கள் மற்றும் இலக்குகளை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு விஷயத்தையும் ஆழமாகச் சிந்தித்த பிறகே அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை முடிவு செய்துவிட்டால், யாரிடமும் சொல்லாமல், யாருடைய உதவியையும் கேட்காமல் செய்து முடிப்பார்கள். இவர்கள் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தயக்கமும், கவனக்குறைவும் அவர்களிடம் ஒருபோதும் இருக்காது.
அதிர்ஷ்டத்தை நம்பாதவர்கள்
சனிவாகவனின் ஆசீர்வாதம் அவர்களுக்கு முழுமையாக இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் அதிர்ஷ்டத்தை நம்ப மாட்டார்கள். மாறாக, அவர்கள் தங்கள் திறமை மற்றும் உழைப்பை நம்பி முன்னேறுகிறார்கள். முன்னேறுவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டாலும் அதை வழங்க அவர்கள் தயாராக இருப்பார்கள். அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப தங்கள் வாழ்வை வடிவமைத்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு நம்பிக்கை குறைவாக இருக்கும் எந்த விஷயத்திலும் ஈடுபட மாட்டார்கள். நினைத்த காரியத்தை முடிக்க தங்களின் அனைத்து திறமைகளையும் பயன்படுத்துவார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் அவர்கள் ஆடம்பரப் பொருட்களின் மீது மோகம் கொண்டவர்கள் அல்ல. ஆடம்பரமான வாழ்க்கையை விட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
