Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
மிருத்யு பஞ்சகம்: இன்று முதல் அடுத்த 5 நாட்கள் இந்த விஷயங்களை செய்யாதீங்க.. இல்ல மரண வேதனையை அனுபவிப்பீங்க..
Mrityu Panchagam 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி மிருத்யு பஞ்சக காலம் அசுபமானதாக கருதப்படுகிறது. இந்த மிருத்யு பஞ்சக காலமானது சந்திரனின் நிலையால் தீர்மானிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி சந்திரன் ஒவ்வொரு 2 1/2 நாட்களுக்கும் ஒருமுறை ராசியைம், ஒவ்வொரு நாளும் நட்சத்திரத்தையும் மாற்றும். அப்படி மாறும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த சந்திரன் குறிப்பிட்ட 5 நட்சத்திரத்திற்குள் நுழையும் நாட்கள் பஞ்சக காலமாக கருதப்படுகிறது. அந்த நட்சத்திரங்களாவன அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி போன்றவை. இந்த நட்சத்திரங்களின் வழியாக சந்திரன் பயணிக்கும் காலம் அசுபமான நாட்களாக கருதப்படுகிறது.

அந்த வகையில் நவம்பர் மாதத்தில் பஞ்சக காலமானது நவம்பர் 09 ஆம் தேதி தொடங்குகிறது. சனிக்கிழமையில் பஞ்சகம் தொடங்குவதால் இது மிருத்யு பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் மோசமான பஞ்சகமாக கருதப்படுகிறது. இந்த பஞ்சக காலம் நவம்பர் 09 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 14 ஆம் தேதி முடிவடைகிறது.
மிருத்யு பஞ்சகம் ஏன் மோசமானது?
சனிக்கிழமையில் தொடங்கும் பஞ்சகம் மிருத்யு பஞ்சகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மிருத்யு பஞ்சக காலத்தில் தீயசக்திகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும். எனவே இந்த பஞ்சகம் ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரும். சொல்லப்போனால் இந்த காலத்தில் ஒருவர் மற்ற நாட்களை விட அதிகமாக உடல், மனம் மற்றும் நிதி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடுவதாக சாஸ்திரம் கூறுகிறது. முக்கியமாக மிருத்யு பஞ்சகத்தின் போது விபத்து ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால், பயணங்களை தவிர்க்க வேண்டும்.
எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது?
* மிருத்யு பஞ்சக காலத்தில் சுப காரியங்கள் அல்லது சுப வேலைகளை செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது நன்மைக்கு பதிலாக கெடுபலனையே அளிக்கும்.
* மிருத்யு பஞ்சக நாட்களில் பீரோ, கட்டில், பாய், மெத்தை போன்றவற்றை வாங்குவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது அசுப பலன்களை அளிக்கும்.
* மிருத்யு பஞ்சக காலத்தில் வீடு கட்டுபவர்கள் கூரை போடுவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த நாட்களில் கூரை போட்டால், அந்த வீட்டில் வாழ்பவர்களின் மகிழ்ச்சியும், அமைதியும் குலையும் என்று நம்பப்படுகிறது.
* முக்கியமாக மிருத்யு பஞ்சக நாட்களில் தெற்கு திசைகளில் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், அனுமனுக்கு பழங்களை படைத்து வழிபட்டு, பின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
* பஞ்சக காலத்தில் யாரேனும் இறந்திருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேர் இறந்துவிடுவார்கள் என்று நம்பப்படுகிறது. ஒருவேளை மரணம் ஏற்படாவிட்டாலும், குடும்பத்தில் இருக்கும் 5 பேர் ஏதேனும் பெரிய பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த பஞ்சக தோஷத்தை தவிர்க்க மாவு கொண்டு 5 உருவங்களை செய்து, அதை இறந்த உடலுடன் வைத்து அவற்றை முறையாக தகனம் செய்ய வேண்டும்.
மிருத்யு பஞ்சக காலத்தில் பிரச்சனைகளை தவிர்க்க இறை வழிபாட்டை அதிகம் மேற்கொள்வதோடு, நல்ல சிந்தனையுடன் இருந்தால், எவ்வித பிரச்சனையையும் சந்திக்காமல் கெட்ட காலத்தை சிறப்பாக கடக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
