Latest Updates
-
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி?
இந்த 4 ராசிக்காரங்க அவங்க பிடிவாத்தால் அவங்க பேரழிவை அவங்களே தேடிக்குவாங்களாம்... இவங்கள திருத்தவே முடியாது...
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசியில் பிறந்தவகர்களும் ஒரு விதத்தில் தனித்துவமானவர்களாக இருப்பார்கள். சில ராசிக்காரர்கள் அனைவரிடமும் நட்பாகவும், மென்மையாக பழகக் கூடியவராக இருக்கும் போது சில ராசிகளில் பிறந்தவர்கள் பிடிவாதக்காரர்களாகவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். தாங்கள் சொல்வது மட்டுமே சரியென்று அடம் பிடிப்பார்கள்.
நியாயமான பிடிவாதம் வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கான ஒரு கருவியாக இது செயல்படக்கூடும். படிப்பு அல்லது வேலை விஷயத்தில் பிடிவாதமாக இருப்பது சாதகமான முடிவுகளை வழங்கலாம், ஆனால் எந்த காரணமும் இல்லாமல் அனைத்து விஷயத்திலும் பிடிவாதமாக இருப்பது சுற்றியுள்ள அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தும், மேலும் இந்த அணுகுமுறை சுய அழிவுக்கு வழிவகுக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் நம்ப முடியாத அளவிற்கு பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிடிவாதமான மற்றும் ஆதிக்கம் செலுத்தும் இயல்புடையவர்கள், அவர்கள் தங்கள் கருத்தை நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள். அவர்கள் தீவிர கவனம் செலுத்துபவர்கள், உறுதியானவர்கள், எந்தவொரு போட்டியையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள், மேலும் தங்கள் மேன்மையை நிரூபிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
அவர்கள் சாதாரண நிதானமான மனநிலையில் இருக்கும்போது, அவர்கள் துடிப்பான, உற்சாகமான மற்றும் விளையாட்டுத்தனமான மனிதர்களாக இருப்பார்கள். ஆனால் போட்டி அல்லது விவாதம் என்று வரும் போது அவர்கள் முற்றிலும் எதிர்மறையான நபர்களாக மாறுகிறார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காளையை அடையாளமாகக் கொண்டவர்கள். எனவே வலிமையான மற்றும் பிடிவாதமான காளையின் இயல்பைப் போலவே, ரிஷப ராசிக்காரர்களும் இயல்பிலேயே வலிமையானவர்கள் மற்றும் பிடிவாதமானவர்கள். அவர்களின் பிடிவாதமான இயல்பு அவர்களை வாழ்க்கையில் பல்வேறு விஷயங்களில் பின்னுக்குத் தள்ளும், ரிஷப ராசிக்காரர்களைப் பற்றிய நேர்மறையான பண்பு என்னவென்றால், பல சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் இலக்குகளில் விடாப்பிடியாக இருந்து தங்கள் கனவுகளையும், லட்சியங்களையும் அடையவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைவருக்குரிய குணம் கொண்டவர்கள், பொதுவாகவே அனைவரையும் வழிநடத்த விரும்புகிறார்கள். அவர்கள் எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன் நன்றாக யோசித்து செயல்படுவார்கள். அவர்கள் ஒருமுறை தங்கள் கருத்தைத் தெரிவித்து விட்டால், அவர்களின் பிடிவாதமான குணம் காரணமாக ஒருபோதும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்.
அவர்கள் மற்றவர்களுடன் நன்றாக பழகினாலும், மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக்கொள்வது என்பது மிகவும் அரிது. இந்த பிடிவாதம் அவர்களை தனிமையில் நிற்க வைக்கிறது, ஏனெனில் நட்பும், உறவுகளும் கொடுக்கல் வாங்கலை அடிப்படையாகக் கொண்டவை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் நெகிழ்வானவர்கள், வெளிப்படையானவர்கள், புத்திசாலிகள் அதேசமயம் பிடிவாதமானவர்கள். அவர்கள் சொல்வது சரி என்று நம்பினால் அவர்கள் எப்போதும் தங்கள் எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள், அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் சில சமயங்களில் மற்றவர்களின் கருத்துக்களில் சில உண்மைகளை உணர்ந்தால் அவர்கள் அதை கேட்க தயங்க மாட்டார்கள்.
அவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள், மற்றவர்களை தங்கள் எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் விரைவாக ஏற்றுக்கொள்ள விரைவாக வற்புறுத்த முடியும். அவர்கள் தொடர்ந்து புதிய விஷயங்களை முயற்சிக்கத் தயாராக இருப்பார்கள், அதை நோக்கி மற்றவர்களையும் ஈர்ப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
