Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
புதன் உருவாக்கும் சக்திவாய்ந்த கேந்திர யோகம்: செப்டம்பர் முதல் வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Kendra Yog On September 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அதோடு இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட.
புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். கிரகங்களில் புதன் குறுகிய காலத்தில் தனது நிலையை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்தோ அல்லது அம்சங்களினாலோ சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

அந்த வகையில் புதன் வருகிற செப்டம்பர் மாத தொடக்கத்தில் யுரேனஸ் உடன் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இந்த யோகமானது செப்டம்பர் 03 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது செப்டம்பரில் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் கேந்திர யோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். வசதிகள் அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் கேந்திர யோகத்தால் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவதோடு, வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றல் சிறப்பாக இருக்கும். இந்த பேச்சால் பல முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். உறவினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் புதன் மற்றும் யுரேனஸால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல வேலைகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் இரட்டிப்பு அதிகரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
