Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
புதன் மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் இந்த 4 ராசிக்காரங்க நஷ்டத்தையும், அவமானத்தை சந்திக்கப் போறாங்களாம்!
ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானதாகும். புதன் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் புதன் வக்ரமாவது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக புதன் வக்ர பெயர்ச்சி அடைவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதேசமயம் இது தனிப்பட்ட வளர்ச்சிக்கு சாதகமான காலமாகவும் இருக்கலாம். மீன ராசியில் புதன் வக்ர பெயர்ச்சி அடைவது சவால்கள் மற்றும் சுயபரிசோதனைகளின் தனித்துவமான கலவையைக் கொண்டுவரும். இந்த காலகட்டம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான சம்பவங்களை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு, புதன் 3 மற்றும் 6 ஆம் வீடுகளை ஆட்சி செய்கிறார், இப்போது 12 ஆம் வீட்டில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையற்ற பல பயணங்களைச் செய்ய வேண்டியிருக்கும், இது உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் சரியான திட்டமிடாமல் இருப்பதால் சில இழப்புகளை சந்திக்க நேரிடும்.
மீன ராசியில் புதன் வக்ரமாக இருக்கும்போது நீங்கள் அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், ஏனெனில் அது உங்களுக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் சமீபத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்தால் அது கைநழுவி போகலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு, புதன் மூன்றாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாக இருக்கிறார், இந்த நிலையில் ஒன்பதாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். மீன ராசியில் புதன் வக்ரநிலையில் இருப்பதால் சமூகத்தில் உங்கள் நற்பெயர் பாதிக்கப்படலாம். சில துரதிர்ஷ்டமான சம்பவங்களை நீங்கள் அனுபவிக்கலாம்.
அலுவலகத்தில் சூழல் உங்களுக்கு எதிரானதாக மாறலாம். வணிகத்தைப் பொறுத்தவரை, உங்களின் உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காது, இது வருமானப் பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை இழக்க நேரிட்டாலும், மாத இறுதியில் நீங்கள் சகஜ நிலைக்குத் திரும்பலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு, புதன் முதல் மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி மற்றும் ஏழாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் அவர்களின் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் உறவு சிக்கல்களை சந்திக்க நேரிடும். வேலை செய்யும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வேலை குறித்து, மேற்பார்வையாளர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
உங்கள் வேலையால் மேலதிகாரிகள் அதிருப்தி அடையலாம். வணிகர்கள், இந்த காலகட்டத்தில் கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதிநிலையைப் பொறுத்தவரை, நீங்கள் எதிர்பாராத பெரிய செலவுகளை சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு, புதன் ஒன்பதாவது மற்றும் பன்னிரண்டாவது வீட்டின் அதிபதியாக உள்ளார், தற்போது ஆறாவது வீட்டில் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமின்மை ஏற்படலாம், மேலும் உங்களின் அனைத்து முயற்சிகளும் தடைபடலாம். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நீங்கள் வேறு வேலைத் தேட முயற்சிக்கலாம்.
உங்கள் போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டி வர வாய்ப்புள்ளதால், வணிகத்தில் நீங்கள் பின்னடைவுகளை சந்திக்கலாம். நிதிரீதியாகப் நீங்கள் பெரிய அளவிலான செலவுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே அனைத்தையும் சமாளிக்க தயாராக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

