Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் புத்தாண்டிற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படப்போகுது
Mercury Direct In Scorpio 2024: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். ஒருவரது ஜாதகத்தில் புதன் நல்ல நிலையில் இருந்தால் தான் அந்நபர் தொழிலில் கொடிகட்டிப் பறக்க முடியும், படிப்பில் சிறந்து விளங்க முடியும் மற்றும் அனைவரையும் மயக்கும் வகையில் நன்கு பேசக்கூடியவராக இருப்பார்.
இப்படிப்பட்ட புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இதுவரை வக்ர நிலையில் பயணித்து வந்த புதன், டிசம்பர் 16 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.

இதனால் இதுவரை புதனால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் இருந்த தடைகள் நீங்கி, சில ராசிக்காரர்களில் வாழ்க்கையில் ஏராளமான நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. இப்போது புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் புத்தாண்டிற்கு முன் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால் மிதுன ராசிக்காரர்கள் கடன் தொல்லையில் இருந்து விடுபடுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் இருந்தால், புத்தாண்டிற்கு முன் அது வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வேலைகளை தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். இதுவரை வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால், அது நீங்கும். வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். விநாயகரை வணங்கி வந்தால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
மகரம்
புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால், மகர ராசிக்காரர்களுக்கு இனிவரும் நாட்கள் பிரமாதமாக இருக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருந்தால், நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். பங்குச் சந்தை, முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படும்.
கும்பம்
புதன் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளதால் கும்ப ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, உயர்வும் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதை பொங்கலுக்கு பின் தொடங்குவது நல்லது. புதனின் ஆசியால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்த ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கி வந்தால், தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications