Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
Mars Transit In Swathi Nakshatra 2025: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரத்தையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் கூட.
இப்படிப்பட்ட செவ்வாய் ஒரு ராசியில் 45 நாட்கள் வரை இருப்பார். அதே சமயம் குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் ஒருவரது வாழ்வில் நன்கு தெரியும். தற்போது செவ்வாய் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய் செப்டம்பர் 23 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்துள்ளார்.

இந்த சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு. செவ்வாய் ராகுவின் நட்சத்திரத்திற்கு நுழைந்து அக்டோபர் 15 ஆம் தேதி வரை இருப்பார். இந்த செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கப் போகிறது. இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் செவ்வாய் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் விடுபடுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வெற்றிகளும், லாபமும் குவியும். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும். தம்பதிகளிடையேயான பிணைப்பு அதிகரிக்கும். நிதி ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வீட்டுச்சூழல் இனிமையாக இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் பயணித்து வருகிறார். இந்நிலையில் செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரிகளுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
செவ்வாயின் செல்வாக்கின் காரணமாக, இந்த ராசிக்காரர்களின் வீட்டுச்சூழல் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தால், இனி நல்ல வேலை கிடைக்கும். இன்று முதல் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஏற்கனவே பிரச்சனையால் சிரமப்பட்டு வந்தால், இனி அந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் பயணித்து வருகிறார். அதுவும் சுவாதி நட்சத்திரத்திற்கு செவ்வாய் செல்வதால் கும்ப ராசிக்காரர்கள் ஏராளமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் தொழிலில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும்.
வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் பேச்சை கட்டுக்குள் வைத்திருந்தால், நல்ல பலன்களைப் பெறலாம். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சில நல்ல காரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
