Latest Updates
-
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! -
பாகிஸ்தானின் நம்பர் ஒன் பணக்காரர் யார்? அவர் முகேஷ் அம்பானியை விட பணக்காரரா? உண்மை என்ன? -
சேமியா ரவா கிச்சடியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
50 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் மங்கள புஷ்ய யோகம்: இந்த 3 ராசிக்கு இதெல்லாம் கட்டாயம் நடந்தே தீரும்..
Mars Transit In Pushya Nakshatra 2025 After 50 Years: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் மனித வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இவ்வாறு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதைத் தவிர, குறிப்பிட்ட கால இடைவெளியில் நட்சத்திரத்தையும் மாற்றுவார். அதுவும் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 12 ஆம் தேதி செவ்வாய் சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். செவ்வாய் பூச நட்சத்திரத்தில் நுழைவதால் மங்கள புஷ்ய யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது மங்கள புஷ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
மங்கள புஷ்ய யோகத்தால் கன்னி ராசிக்காரர்கள் எதிர்பாராத பண பலன்களைப் பெறுவார்கள். பல புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் பெருகும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
மங்கள புஷ்ய யோகத்தால் மீன ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படல்ம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். வீண் செலவுகள் குறையும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணம் நல்ல ஆதாயத்தைத் தரும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மங்கள புஷ்ய யோகத்தால் மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
