Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன?
செவ்வாய் பெயர்ச்சியால் ஜனவரி 21 முதல் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிக்கட்டி பறக்கப் போறாங்க..
Mars Transit In Gemini 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் சிறப்பான நிலையில் இருந்தால், அந்நபர் தைரியமாகவும், துணிச்சல் நிறைந்தவராகவும் இருப்பார். ஏனெனில் செவ்வாய் வீரம், தைரியம், துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது செவ்வாய் வக்ர நிலையில் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 21 ஆம் தேதி செவ்வாய் வக்ர நிலையில் மிதுன ராசியில் நுழையவுள்ளார். பொதுவாக கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் எதிர்மறையான தாக்கம் அதிகமாக இருக்கும்.

இருப்பினும் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் வக்ர நிலையில் செவ்வாய் மிதுன ராசியை அடைவதால் சில ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மிதுன ராசிக்கு வக்ர நிலையில் செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் தங்களின் வேலையை உற்சாகமாகவும், ஆற்றலுடனும் செய்வார்கள். இதன் மூலம் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது. பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால், நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், வெற்றியும் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்வீர்கள். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் தொழில் ரீதியாக, மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். பணிபுரிபவர்கள் சிறப்பான செயல்திறனால் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications