செவ்வாய் பெயர்ச்சியால் அக்டோபர் 20 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் பிரச்சனை அதிகமா இருக்கும்...

Mars Transit In Cancer 2024: ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். இந்த செவ்வாய் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் வரை இருப்பார் மற்றும் இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார்.

ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் எதற்கும் அஞ்சாதவராக, தைரியசாலியாக இருப்பார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 20 ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழைவுள்ளார். இந்த கடக ராசியானது சந்திரனின் ராசியாகும்.

Mars Transit In Cancer 2024 These Zodiac Signs Will Face Trouble in Career

கடக ராசிக்கு செவ்வாய் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாகவும், சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கலாம். இப்போது செவ்வாய் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆடம்பரங்கள் குறையலாம். குடும்ப வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு தொழிலிலும் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எந்த வேலையையும் செய்யுங்கள். உங்களின் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமாக இருக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் மட்டுமின்றி, உங்கள் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும். சில நல்ல வாய்ப்புக்கள் உங்கள் கையில் இருந்து நழுவக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்கக்கூடு. மேலும் உங்களின் செலவுகளும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையக்கூடும்.

தனுசு

தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலர் வேலையை மாற்ற முடிவெடுக்கலாம். வியாபாரிகள் லாபம் ஈட்ட பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காது. உறவுகளிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு ஆரோக்கியம் தொடர்பான சில பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள்.

மீனம்

மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படுவார்கள். வியாபாரிகள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். தொழிலதிபர்கள் தங்கள் கூட்டாளிகளால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். தனிப்பட்ட வாழ்க்கை சற்று குழப்பம் நிறைந்ததாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Saturday, October 12, 2024, 23:46 [IST]
Desktop Bottom Promotion