Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
சிம்மத்தில் கேது-செவ்வாய் உருவாக்கும் அங்காரக யோகம்: ஜூன் 7 முதல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது!
Mars Ketu Conjunction Forms Angarak Yog On 07 June 2025: வேத ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை பயணிப்பார் மற்றும் இவர் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். இப்படிப்பட்ட கேது சமீபத்தில் தான் சிம்ம ராசிக்குள் நுழைந்தார். இந்த சிம்ம ராசியில் கேது 2026 டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார்.
இந்நிலையில் கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஜூன் 07 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகவுள்ளது. ஜோதிடத்தில் இந்த யோகம் செல்வாக்கு மிக்க மற்றும் ஆற்றல்மிக்க யோகமாகக் கருதப்படுகிறது.

கிரகங்களில் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் கேது மர்மம், ஆன்மீகம் ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட இவ்விரு கிரகங்களும் ஒன்றிணையும் போது, ஒருவரது உற்சாகம், தன்னம்பிக்கை போன்றவை அதிகரிக்கும். அதே வேளையில் கோபம், அவசரம் மற்றும் குழப்பமும் ஏற்படலாம்.
இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையும் தெரியும். இருப்பினும் இந்த சேர்க்கையால் 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் கேது சேர்க்கையால் உருவாகும் அங்காரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கையும், அங்காரக யோகமும் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அதிகரிக்கும். வாழ்க்கையின் ஆழமான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பீர்கள். வேலைகளில் நல்ல வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொருள் வசதிகள் உயரும். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். இருந்தாலும், இக்காலத்தில் உங்கள் கோபத்தையும் அவசர முடிவுகளை எடுப்பதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது செவ்வாய் சேர்க்கையும், அங்காரக யோகமும் உருவாவதால், சிம்ம ராசிக்காரர்கள் கல்வி துறையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும். கேதுவின் காரணமாக, சுயபரிசோதனை செய்யும் போக்கு அதிகரிக்கும். மேலும் நீங்கள் உங்களை நன்கு புரிந்துகொண்டு முன்னோக்கி செல்வீர்கள். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வேலைகளில் வெற்றி கிடைக்கும். இருந்தாலும் கேதுவின் தாக்கத்தால் எதிர்காலம் பற்றிய குழப்பமோ, பதட்டமோ இருக்கும். சமநிலையை பேண முயற்சிக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகமானது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் வெற்றிக்கான புதிய கதவுகளைத் திறக்கும். தியானம், யோகா போன்றவற்றில் ஆர்வம் அதிகரிக்கும். இதன் மூலம் மன அமைதி அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம், வேலை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். ஒட்டுமொத்த, இக்காலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications