Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
இன்னும் 5 நாட்களில் உருவாகவுள்ள மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது...
Malavya Rajyog On 28 January 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியையும், நட்சத்திரத்தையும் மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. அதில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார்.
ஒருவர் தங்கள் வாழ்க்கையில் இவற்றையெல்லாம் பெற வேண்டுமானால், அதற்கு சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இப்படிப்பட்ட சுக்கிரன் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜனவரி 28 ஆம் தேதி சுக்கிரன் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். மீன ராசிக்கு சுக்கிரன் செல்வதால், மங்களகரமான மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ளார்கள். குறிப்பாக தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிறப்பான பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வசதிகளைப் பெறவுள்ளார்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். தாயிடமிருந்து நல்ல நிதி நன்மைகளையும், ஆதரவையும் பெறுவார்கள்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். செல்வம் பெருகும். பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக, நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். பேச்சு மிகவும் சுவாரஸ்யமாக மற்றவர்களை கவரும் வகையில் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிப்பதோடு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கலாம். தேவையில்லாத செலவுகள் குறைந்து, நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தந்தையுடனான உறவு மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications