Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
50 ஆண்டுகளுக்கு பின் ஒரேவேளையில் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு செல்வம் குவியப்போகுது...
Malavya And Budhaditya Rajyog In Libra 2025: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றி சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் துலாம் மற்றும் ரிஷப ராசிகளின் அதிபதியாவார்.
இந்நிலையில் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளார். இதனால் செப்டம்பரில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. அதோடு சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகமும் உருவாகவுள்ளது. இப்படி இரண்டு ராஜயோகங்களும் உருவாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, மகத்தான செல்வத்தையும் பெறக்கூடும். முக்கியமாக பல ஆண்டுகளாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்புள்ளது. இப்போது மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. தொழிலதிபர்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். மேலும் ஒன்றிற்கு மேற்பட்ட வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். ஒவ்வொரு துறையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். ஊடகம், ஃபேஷன் டிசைனிங், மாடலிங் போன்ற துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
துலாம்
மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சட்ட விஷயங்களில் தீர்ப்புகள் சாதகமாக வரும். பல புரிய சாதனைகளைப் புரிவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில்களில் எதிர்பாராத பலன்களைப் பெறுவீர்கள்.
கும்பம்
மாளவ்ய மற்றும் புதாத்திய ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். முக்கியமாக நிறைய பணத்தை சேமிக்க முடியும். இதன் மூலம் வாழ்க்கை செழிப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
