Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இன்னிக்கு உங்க ராசிப்படி சிவனுக்கு இத வாங்கி கொடுத்து வழிபடுங்க.. உங்க கஷ்டங்கள் எல்லாம் தீரும்...
Maha Shivratri 2025: சிவபெருமானுக்கு உரிய தினம் தான் மகா சிவராத்திரி. சிவபெருமானின் ஆசியை பெற நினைப்பவர்கள் இந்த மகா சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் விழித்து விரதமிருந்து, அவருக்கு பூஜைகளை செய்து வழிபாடு செய்து வந்தால் பெறலாம். இந்து நாட்காட்டியின் படி, பிப்ரவரி 26 ஆம் தேதி, அதாவது இன்று மகா சிவராத்திரி.
இந்து நம்பிக்கைகளின் படி, மகா சிவராத்திரி நாளில் தான் சிவனும், பார்வதியும் திருமணம் செய்து கொண்டனர். இந்நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினால், வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி, அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

அதுவும் ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் ஏற்றவாறு சிவபெருமானை வழிபட்டு வந்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைப்பதாக கூறப்படுகிறது. இப்போது மகா சிவராத்திரி நாளில் ஒவ்வொரு ராசிக்காரரம் சிவனை எப்படி வழிபட வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் கரும்பு சாற்றினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, தேன் நிவேதனம் செய்யுங்கள். முக்கியமாக சிவனுக்கு நிவேதனம் செய்யும் தேன் சுத்தமானதாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் காய்ச்சாத பசும்பாலினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் சிவனுக்கு பாயாசத்தை செய்து நிவேதனம் செய்ய வேண்டும். இதனால் வீட்டில் உள்ள பணப்பிரச்சனை நீங்கி, செல்வம் பெருகும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வில்வ இலை கலந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் அன்னதானம் செய்தால், கஷ்டங்கள் தீரும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு வெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்வது நல்லது. மேலும் இந்த ராசிக்காரங்கள் இனிப்புக்களை நிவேதனம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இதன் மூலம் மன அழுத்தம் நீங்கி, மன அமைதி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் வெல்லம் கலந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். இதனால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளைப் போக்குவார்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவலிங்கத்திற்கு பால் கொண்டு அபிஷேகம் செய்வது நல்லது. மேலும் இந்த ராசிக்காரர்கள் கொய்யா, அன்னாசி போன்ற பழங்களை சிவனுக்கு நிவேதனம் செய்து வழிபடுவது மிகவும் நல்லது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் வெல்லம் அல்லது கற்கண்டை சிவனுக்கு நிவேதனம் செய்து, பன்னீரால் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளன்று குங்குமப்பூ கலந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் ஆப்பிளை சிவனுக்கு நிவேதனம் செய்ய வேண்டும். அதோடு பிராமணருக்கு சிவப்பு துணியை தானம் செய்ய வேண்டும். இதனால் நன்மைகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் கோபி சந்தனம் கலந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மேலும் குங்குமப்பூ கலந்த இனிப்புக்களை சிவனுகு நிவேதனம் செய்ய வேண்டும். இதனால் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மகாசிவராத்திரி நாளில் எள்ளு கலந்த நீரால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அதோடு உலர் பழங்களை சிவனுக்கு படைத்து வழிபட வேண்டும். இதனால் வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானுக்கு நீல நிற பூக்களை படைத்து வழிபாடு செய்வது நல்லது. மேலும் சாக்லேட் பர்பியை நிவேதனம் செய்வது நல்லது. அதோடு ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும். இதனால் சிவனின் அருள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி நாளில் மஞ்சள் நிற பூக்களை சிவபெருமானுக்கு படைத்து வழிபட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications