Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
இந்த 4 சோம்பேறி ராசிகள் குடும்பத்துக்கு பாரமாக இருப்பார்களாம்... இவர்கள் தோல்வியின் அடையாளமாக இருப்பார்களாம்!
திறமையானவர்களாகவும் இருப்பார்கள். அதேசமயம் சில ராசிக்காரர்கள் மிகவும் சோம்பேறிகளாகவும், திறமையற்றவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் எப்போதும் ஓய்வை விரும்புவார்கள், தங்களால் முடிந்தாலும் அந்த வேலையை செய்யாமல் தள்ளி போடுவார்கள். இவர்கள் அவர்கள் குடும்பத்திற்கு எந்த விதத்திலும் பயனற்றவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் அவர்களின் சோம்பேறித்தனத்தால் தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வலுவான விருப்பத்திற்கும், உறுதிக்கும் பெயர் பெற்றவர்கள். ஆனால் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாறக்கூடாது, அவர்களுக்கும் ஒரு சோம்பேறித்தனமான முகம் உண்டு. இவர்கள் ஆடம்பரத்தை விரும்புவர்கள், இது சில நேரங்களில் அவர்களை சோம்பேறித்தனத்தில் சிக்க வைக்கும். அவர்கள் பொதுவாக பயனற்றவர்கள் அல்ல, ஆனால் கடின உழைப்பை விட இன்பம் மற்றும் ஆறுதலுக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
அவர்கள் வேலைகளை வெறுப்பவர்கள் அல்ல, ஆனால் அவர்கள் விரும்பும் வேலையை மட்டும்தான் ஆர்வத்துடன் செய்வார்கள், மற்ற வேலைகளில் மிகவும் சோம்பேறிகளாக இருப்பார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் விருப்பப்படி மட்டுமே விஷயங்களைச் செய்கிறார்கள், அவர்கள் மீது திணிக்கப்படும் வேலைகளை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்போதும் கனவுலகில் வாழ்பவர்கள், நிஜ உலகில் வாழ ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அன்றாட வாழ்க்கையின் யதார்த்தங்களை எதிர்கொள்வதை விட தங்கள் சொந்த உலகில் வாழ விரும்புகிறார்கள். இந்த கனவு காணும் இயல்பு அவர்களை சலிப்பான அல்லது மந்தமாக கருதும் சில வேலைகளை செய்யாமல் தள்ளிப்போட வைக்கிறது.
அவர்கள் படைப்பாற்றல் நிறைந்தவர்களாக இருந்தாலும், சில சமயங்களில், அவர்கள் தங்கள் யோசனைகளில் மூழ்கி செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல் தவிர்க்கிறார்கள் அல்லது அவர்களின் கற்பனை உலகில் இருக்க விரும்புவதால் யதார்த்தத்தை எதிர்கொள்ளும் சூழலில் சோம்பேறித்தனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள், அவர்கள் தாங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் செயலில் ஈடுபடுவதற்குப் பதிலாக ஓய்வில் இருப்பதில் ஆறுதல் அடைகிறார்கள். சிறிய விஷயங்கள் கூட அவர்களை எளிதில் சோர்வடையச் செய்யும், அவர்கள் சோர்வடையும் போதெல்லாம் வெளிஉலகத்திலிருது தங்களை துண்டித்துக் கொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலைகளில் வேலை செய்வதையோ அல்லது பொறுபேற்றுக் கொள்வதையோ அவர்கள் தவிர்க்கலாம். அவர்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்கள், எப்போதும் தங்களை ஒருவர் பாதுகாக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சமநிலையையும், நல்லிணக்கத்தையும் விரும்புகிறார்கள், அது அவர்களை பிரச்சினையில் ஈடுபடவோ அல்லது தங்கள் உலகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடவோ விரும்புவதில்லை.
அவர்களின் முடிவெடுக்கும் தன்மை மற்றும் ஆறுதல் மற்றும் இனிமையான சூழலின் மீதான ஈர்ப்பு அவர்களை உழைப்பையும், முயற்சியையும் எளிதில் தள்ளிப்போட வைக்கும். அவர்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அந்த செயல்பாடு சுவாரஸ்யமாக இல்லயென்றாலோ அல்லது அது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நினைத்தால் அவர்கள் அந்த விஷயத்தை செய்ய மாட்டார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
