Latest Updates
-
சிப்ஸ் பாக்கெட்களில் ஏன் சிப்ஸை விட காற்று அதிகமாக உள்ளது தெரியுமா? அது சாதாரண காற்றே இல்லையாம் -
15 நிமிடத்தில் இட்லி குருமா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
அக்டோபர் 06 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் இறுதியில் நடக்கும் குரு பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டப்போகுது! -
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் இந்த 3 ராசியின் பலமும்,பணமும் அதிகரிக்கப்போகுதாம் -
ஹோட்டல் ஸ்டைல் முந்திரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - அருமையா இருக்கும் -
இந்த ஒரு பொடியை அரைச்சு வெச்சுக்கோங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா?
அக்டோபரில் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு பணம் சம்பாதிக்க புதிய வழி கிடைக்கும்!
Lakshmi Narayan Rajyoga 2026: ஜோதிட ரீதியாக அக்டோபர் மாதமானது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதோடு, அவற்றின் நிலைகளால் பல மங்களகரமான யோகங்களும் உருவாகின்றன. அதில் ஒரு சுப யோகம் தான் லட்சுமி நாராயண ராஜயோகம்.

இந்த ராஜயோகமானது புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகக்கூடியது. அதுவும் இந்த சேர்க்கை துலாம் ராசியில் நிகழ்ந்துள்ளது. இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார். இப்படி சுக்கிரனின் சொந்த ராசியில் இந்த யோகம் உருவாகியிருப்பது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இப்படிப்பட்ட இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகமானது நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சிறப்பான பலன்களைத் தரும்.
இந்த மங்களகரமான ராஜயோகமானது அக்டோபர் முழுவதும் நீடித்திருப்பதால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காணவுள்ளனர். இப்போது புதன், சுக்கிர சேர்க்கையால் உருவாகியுள்ள லட்சுமி நாராயண ராஜயோகத்தால் செல்வ செழிப்பைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் புத்திசாலித்தனம், திறமையால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பேச்சுத்திறனால் பல புதிய வழிகளில் பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மொத்தத்தில் இந்த யோகத்தால் தொழில் சிறக்கும், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய நட்புகளால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது.இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதால் ஊதிய உயர்வும் கிடைக்கலாம். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நிதி ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கை சந்தோஷமாகவும், இனிமையாகவும் இருக்கும். புதிய வழியில் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் புதன் சுக்கிர சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் புதிய யோசனைகளால் தங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் நிதி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications





