Latest Updates
-
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்!
12 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: சுக்கிரனால் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்..
Lakshmi Narayan Rajyog On November 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். சொல்லப்போனால் ஒரு மாதத்தில் 2 முறை ராசியை மாற்றுவார். இப்படிப்பட்ட புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம், அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் தற்போது புதன் விருச்சிக ராசியில் உள்ளார். இந்த விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் செவ்வாயுடன் ஒன்றிணைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் புதன் மாத இறுதியில் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் பயணித்து வருகிறார். இதனால் துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் மிகவும் மங்களகரமான லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தினால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் தெரிந்தாலும், 3 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கவுள்ளனர். இப்போது துலாம் ராசியில் நிகழும் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நேர்மறையான பலன்களைப் பெறவுள்ளனர். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சுக்கிரனின் அருளால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இது தொழிலில் நல்ல லாபத்தைத் தரும். போட்டியாளர்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். நிறைய வருமானத்தை ஈட்ட முடியும். நிறைய பணத்தை சேமித்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் புதன் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காண்பீர்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். சுக்கிரனின் அருளால் பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications